ஆளுமை:தம்பித்துரை, கு. வி.

From நூலகம்
Name தம்பித்துரை
Birth
Place புங்குடுதீவு
Category வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தம்பித்துரை, கு. வி புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவர் தன் சொந்த முயற்சியாலும் அயராத உழைப்பினாலும் முன்னேறியதுடன் பொருளற்றார் கூட்டுறவிற்கு வாரிக் கொடுத்தார்.

இவர் அச்சுக்கலையின் புதிய சகாப்தத்தை உருவாக்கியதுடன் 1964 - 1968 காலப்பகுதியில் புங்குடுதீவுக் கிராம முன்னேற்றச் சங்கத் தலைவராக இருந்து உள்ளூராட்சி அமைச்சர் மு.திருச்செல்வத்தை வரவழைத்துப் புங்குடுதீவில் புதிய கிராம முன்னேற்றச் சங்கத்தை நிர்மாணித்தார்.

இவர் இறுப்பிட்டி பெரியபுலம் விநாயகர் ஆலயம் புனருத்தாரணம் செய்து அப்பகுதி மக்களின் ஆன்மீக வாழ்வுக்கு வழிகாட்டினார். இவர் கண்டி, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் கலைவாணி புத்தகசாலை மூலம் சிறந்த நூல்களை மக்களுக்கு விநியோகித்து அறிவு வளர்ச்சி பெற வழிகாட்டினார்.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 264