ஆளுமை:தணிகாசலம், சின்னையா
From நூலகம்
Name | தணிகாசலம் |
Pages | சின்னையா |
Pages | கனகம்மா |
Birth | 1913.03.17 |
Place | கரவெட்டி |
Category | ஆசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தணிகாசலம், சின்னையா (1913.03.17 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை சின்னையா; இவரது தாய் கனகம்மா. இவர் தனது ஆரம்பக் கல்வியைப் புலோலி தட்டாதெரு தமிழ்க் கலவன் பாடசாலையிலும் ஹாட்லிக் கல்லூரியிலும் கற்று, கொழும்புப் பல்கலைக்கழகக் கல்லூரியில் உயர் கல்வி கற்று 1934 இல் விஞ்ஞானமாணிப் பட்டத்தைப் பெற்றார்.
இவர் புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியை ஆரம்பித்துப் பின்னர் அப்பாடசாலையின் அதிபராகித் தொடர்ந்து கல்வி அதிகாரியாக, சிரேஷ்டக் கல்வி அதிகாரியாகக் கண்டி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் கடமையாற்றினார்.
Resources
- நூலக எண்: 5973 பக்கங்கள் 46-48