ஆளுமை:தணிகாசலம், கதிரவேலு
Name | தணிகாசலம் |
Pages | கதிரவேலு |
Birth | 1928.11.19 |
Place | உடுப்பிட்டி |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தணிகாசலம், கதிரவேலு (1928.11.19 - ) யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கதிரவேலு. இவர் கர்நாடக சங்கீதத்தை எஸ். நடராசா, நா. ப. பாலச்சந்திரன் ஆகியோரிடமும் பண்ணிசையை பி. ஏ. எஸ். இராகசேகரன் பண்டுருட்டி, திருமகல் எஸ். சோமசுந்தர ஓதுவார் மூர்த்தி, திருச்சி முத்துக்குமாரசுவாமி, தருமபுரம் சுவாமிநாதன் போன்றோர்களிடமும் கற்றார்.
இவர் 1944 ஆம் ஆண்டிலிருந்து (16 ஆவது வயதிலிருந்து) நாடகத்துறையில் ஈடுபாடு கொண்டதுடன் மானிப்பாய் மறுமலர்ச்சி மன்றத்தின் நாடகங்கள் சிலவற்றிற்குப் பிற்பாட்டுப் பாடியுள்ளதோடு தமிழர் வரலாறும் இலங்கை இடப்பெயர் ஆய்வும் என்னும் ஆய்வு நூலினையும் பொது அறிவு, தமிழ் மொழியின் மாட்சியும் பரந்த பண்பாடும், விநாயகர் அகவல் தெளிவுரை போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.
இவர் சைவப்புலவர், பண்ணிசைமணி, தமிழறிஞர், ஓதுவார் மூர்த்தி, ஞானபண்டித ஆய்வரசு, கலைஞானகேசரி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
Resources
- நூலக எண்: 15444 பக்கங்கள் 29