ஆளுமை:ஞானக்குமாரன்

From நூலகம்
Name ஞானக்குமாரன்
Birth
Place மட்டுவில்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஞானக்குமாரன் யாழ்ப்பாணம், மட்டுவிலைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர், குறுந்திரைப்பட இயக்குனர். இவர் யாழ்ப்பாணம் மானிப்பாய் இந்துக் கல்லூரி, கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி கற்றதுடன் ஜேர்மனிய மொழிப் போதனாசிரியராகவும் விளங்கினார்.

இவர் தனது படைப்புக்களை இலங்கையின் தேசிய பத்திரிகைகளிலும் சர்வதேச சஞ்சிகைகளிலும் இணையத்தில் வெளிவரும் இலக்கியச் சஞ்சிகைளிலும் எழுதியுள்ளார். இவர் வெளிச்ச வீடுகள் என்னும் கவிதை இறுவட்டை பின்னணி இசையோடு தனது குரலில் வெளியிட்டிருப்பதோடு லண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பான கரையைத் தேடும் ஓடங்கள் என்னும் வானொலி நாடகத்தை எழுதி, இயக்கி, நடித்துப் பாராட்டைப் பெற்றிருக்கின்றார். வசந்தம் வரும் வாசல், முகமறியாத வீரர்களுக்காக, சிறகு முளைத்த தீயாக ஆகியன இவரது கவிதைகளாகும்.


வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 15514 பக்கங்கள் 364