ஆளுமை:ஜோசப் சந்திரகாந்தன், அடைக்கலமுத்து

From நூலகம்
Name ஜோசப் சந்திரகாந்தன்
Pages அடைக்கலமுத்து
Birth
Place நெடுந்தீவு
Category சமயப் பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருட்தந்தை ஜோசப் சந்திரகாந்தன், அடைக்கலமுத்து நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சமயப் பெரியார். இவரது தந்தை அமுதுப் புலவரான அடைக்கலமுத்து. இவர் இறை சேவைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கிறிஸ்தவக் கோட்பாடுகளில் கலாநிதிப் பட்டம் பெற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கிறிஸ்தவ, இஸ்லாமியத் துறைகளை நிறுவி அதன் தலைவராகவும் இணைப் பேராசிரியராகவும் பதினேழு ஆண்டுகள் பணியாற்றினார்.

இவர் மொன்றியலில் உள்ள புனித கோர்டியாப் பல்கலைக்கழகத்திலும் பின்னர் ஒட்டவாப் பல்கலைக்கழகத்திலும் தற்போது ரொறன்ரோப் பல்கலைக்கழகத்திலும் இறையியற் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். இவர் மக்களின் ஆன்மீக உணர்வுக்குத் தேவையான கிறிஸ்தவ சமயப்பணிகளையும் சமூகப் பணிகளையும் நடாத்தி வருகின்றார். இவர் பத்திற்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியதோடு பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 133