ஆளுமை:ஜேம்ஸ், கஸ்ப்பார்

From நூலகம்
Name ஜேம்ஸ்
Pages கஸ்ப்பார்
Pages தொம்மை விக்ரோறியா
Birth
Place மன்னார் நானாட்டான் பள்ளக்கமம்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜேம்ஸ், கஸ்ப்பார் மன்னார் நானாட்டான் பள்ளக்கமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை கஸ்ப்பார்; தாய் தொம்மை விக்ரோறியா. தனது கல்வியை மன்னார் முருங்கன் மத்திய மகாவித்தியாலயத்தில் கற்றார். பாடசாலை காலத்தில் இருந்தே கலையில் ஈடுபாடுடைய இவர் கட்டுரை, கவிதை வாசித்தல், பேச்சுப்போட்டிகளில் கலந்துகொண்டு திறமைகளை வெளிப்படுத்தினார். விவிலியத்தில் இருந்து எடுத்த ஊதாரி மைந்தன் உவமையை திருந்திய மகன் எனும் நாடகத்தினை எழுதி அரங்கேற்றியுள்ளார். தொடர்ந்து நடிகனாகவும் தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.

வீரமங்கை, நாட்டுக்கூத்து, விசப்பரீட்சை (வில்லியம் தெல் கதை), இன்பபுரி இளவரசன் சரித்திர நாடகம், வீர வேந்தன் கரிகாலச்சோழனின் சரிதை ஒரு பகுதி நாட்டுக்கூத்து, யாருக்கு வெற்றி புராண நாடகம், பாட்டு வாத்தியாரும் மோட்ட வேலைக்காரனும் நகைச்சுவை நாடகம் போன்றவற்றை எழுதி மேடையேற்றியுள்ளார். பல நாட்டுக்கூத்துக்களையும் நகைச்சுவை நாடகங்களையும் எழுதி மேடையேற்றியுள்ளதுடன் நாட்டார் பாடல், கும்மி வில்லிசை போன்றவையும் எழுதி அரங்கேற்றியுள்ளதுடன் ஒன்பனை கலைஞனாகவும் நெறியாளராகவும் இவர் தன்னை அடையாளப்படுத்துகிறார்.சமூக சேவையாளராக பல அமைப்புக்களுடன் இணைந்து சமூக சேவைகளை செய்து வருகிறார்.

விருதுகள்

கலைஞர் விருது

கலைச்சின்னம்

செழுங்கலை வித்தகர் – நானாட்டான் கலாசாரப் பேரவை 2013

கலாபூஷணம்

ஜனாதிபதி விருது

முதலமைச்சர் விருது

இந்திய திரைப்படக்கூட்டுத்தாபனமான மாஸ் திரைப்படக்கல்லூரியால் வருது பெற்றுள்ளார்.

வெளி இணைப்புக்கள்