ஆளுமை:ஜுஸ்லா, ரமீஸ்

From நூலகம்
Name ஜுஸ்லா
Pages ரஷீட்
Pages பாத்தும்மா
Birth 1987.03.11
Place மட்டக்களப்பு காத்தான்குடி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜுஸ்லா, ரமீஸ் (1987.03.11) மட்டக்களப்பு காத்தான்குடியில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை ரஷீட்; தாய் பாத்தும்மா. ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர் கல்வி வரை மட்டக்களப்பு காத்தான்குடி மீரா பாலிகா வித்தியாலயத்தில் கற்றார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொது கலைமாணி பட்டத்தை பெற்றுள்ள இவர் கத்தான்குடி பிரதேச செயலகத்தில் கணக்காய்வு அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றுகின்றார்.

12 வயதில் எழுத்துத் துறைக்கள் பிரவேசித்த இவர் கவிதை, கட்டுரை, விமர்சனம், ஆய்வுக்கட்டுரை எழுதுதல் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். தமிழ்த்தினப் போட்டியில் மாகாண மட்டத்தில் கவிதைப் போட்டியில் முதலிடத்தையும் பேராதனைப் பல்ககை்கழத்தின் இஸ்லாமிய தின கவிதைப் போட்டியில் முதலாம் பரிசையும் பெற்றுள்ளார். பல சான்றிதழ்களையும் பாராட்டுக்களையும் இவர் பெற்றுள்ளார். நான்கு நூல்களுக்கு விமர்சனம் எழுதியுள்ளார்.

இவரின் ஆக்கங்கள் தினகரன், சரிநிகர், ஆகிய நாளிதழ்களிலும் மை எனும் ஊடறுவினால் வெளியிடப்பட்ட கவிதை தொகுப்பிலும், சொல், மறுகா, நல்லுறவு, அம்பலம், உயிர்நிழல் ஆகிய சஞ்சிகையிலும் காலச்சுவடு, உயிர்மை, ஆகிய இந்திய சஞ்சிகைகயிலும் வெளிவந்துள்ளன.

குறிப்பு: மேற்படி பதிவு கலாநிதி ஜுஸ்லா, ரமீஸ் அவர்களின் தகவலை அடிப்படையாகக் கொண்டது.