ஆளுமை:சௌந்தரி, கணேசன்

From நூலகம்
Name சௌந்தரி
Pages கணேசன்
Pages மகேஸ்வரி
Birth
Place யாழ்ப்பாணம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சௌந்தரி, கணேசன் யாழப்பாணம் வடமராட்சி கரவெட்டியில் பிறந்த பெண் ஆளுமை. தற்பொழுது அவுஸ்திரேலியாவில் வசிக்கின்றார். இவரது தந்தை கணேசன்; தாய் மகேஸ்வரி. ஆரம்பக் கல்வியை கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும் பருத்தித்துறை மெதடிஸ்ட் பெண்கள் உயர்தர பாடசாலையிலும் கல்வி கற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் சிறப்புப் பட்டமும் வெஸ்ரேன்சிட்னி பல்கலைக்கழகத்தில் கணக்கியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாம்பியா, நியுசிலாந்து ஆகிய நாடுகளில் கணிதம் மற்றும் இரசாயனவியல் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். தற்பொழுது சிட்னியில் கணக்கியல்துறையில் நிர்வாக மேலாளராகப் பணிபுரிகின்றார்.


கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் அறிவிப்பாளராகவும் இருந்து பணியாற்றகின்றார். சிட்னியில் நடைபெறும் இலக்கிய நிகழ்ச்சி , சமூக அமைப்புக்களின் செயற்பாடுகளிலும் இணைந்து செயற்பட்டு வருகிறார். அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக நிகழ்ச்சி தயாரித்து வழங்குகின்றார். தனது இலக்கிய பயணத்திற்கு வானொலி, வார இதழ்கள், முகநூல், இணையம், என க் குறிப்பிடுகின்றார் எழுத்தாளர். :- “நீர்த்திரை” என்ற கவிதைத் தொகுதியையும் இவர் வெளியிட்டுள்ளார்.


வெளி இணைப்புக்கள்