ஆளுமை:செல்லையாபிள்ளை, சின்னத்தம்பி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்லையாபிள்ளை
தந்தை சின்னத்தம்பி
பிறப்பு
ஊர் அச்சுவேலி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்லையாபிள்ளை, சின்னத்தம்பி யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சின்னத்தம்பி. யாழ்ப்பாணம் கந்தவன ஆலயத்தின் ஆதீனகர்த்தாவாக விளங்கிய இவர், அத்திருக்கோயிலின் பூசைகள், விழாக்கள் யாவற்றையும் செவ்விய முறையில் நடாத்துவித்தார்.

சைவ சித்தாந்த சாத்திரங்களிலும் பெரிய புராணத்திலும் மிகுந்த புலமை படைத்த இவர், துகளறுபோதத்துக்கு உரை வகுத்து வெளியிட்டுள்ளதோடு, பெரிய புராணத்திலுள்ள சிறந்த பாடல்களுக்கு உரை விளக்கங்கள் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 139-140