ஆளுமை:செபரெத்தினம், கனகரெத்தினம்

From நூலகம்
Name செபரெத்தினம்
Pages கனகரெத்தினம்
Birth 1930.09.24
Pages 2013.12.28
Place தம்பிலுவில்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செபரெத்தினம், கனகரெத்தினம் (1930.09.24- 2013.12.28) கிழக்கு மாகாணத்தின் தம்பிலுவிலைச் சேர்ந்த கலைஞர். இவரின் தந்தை கனகரெத்தினம்

இவர் யாழ்ப்பாணம் நல்லூர் கிறிஸ்தவ ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியராகப் பயிற்சி பெற்றார். பேராதனைப் பல்கலைக்கழகக் கலைப்பட்டதாரியான இவர், அப்பல்கலைக்கழகத்தில் தமிழ் வித்துவான் பட்டத்தையும் பெற்றுக் கொண்டதுடன் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவையும் பெற்றார்.

இவர் மட்டக்களப்புப் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபராகப் பணியாற்றியவர். 1962 ஆம் ஆண்டு கிழக்கிலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் 1967 இல் மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் 1968 இல் கிழக்கிலங்கைப் பண்டிதர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருந்தவர்.

Resources

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 92-93