ஆளுமை:சுப்பிரமணிய சாஸ்திரிகள், சபாபதி ஐயர்

From நூலகம்
Name சுப்பிரமணிய சாஸ்திரிகள்
Pages சபாபதி ஐயர்
Birth 1875.02.17
Pages 1950
Place தும்பளை
Category புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பிரமணிய சாஸ்திரிகள், சபாபதி ஐயர் (1875.02.17 - 1950) யாழ்ப்பாணம், தும்பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட சோதிடர், புலவர். இவரது தந்தை சபாபதி ஐயர். ஆரம்பத்தில் மகாதேவக் குருக்களிடம் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளையும் கற்ற இவர், முத்துக்குமாரசுவாமி குருக்களிடம் தமிழ் இலக்கண இலக்கியங்கள், சமஸ்கிருதம், தருக்கம், வியாகரணம், சோதிடம் ஆகியவற்றை முறைப்படி கற்றுக் கொண்டார்.

புலோலி சைவ வித்தியாசாலையில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த இவர், பருத்தித்துறையில் வாக்கிய கணித பஞ்சாங்கமொன்றை வெளியிட்டு வந்தார். தமது இல்லத்தில் சோதிட விலாச யந்திரசாலை என்னும் பெயருடன் அச்சகமொன்றை நிறுவியதோடு 1904 ஆம் ஆண்டு புதியதொரு அச்சகத்தைக் கலாநிதி யந்திரசாலை என்னும் பெயருடன் நிறுவிக் கொண்டார்.

இவர் கந்தபுராணம் உற்பத்திக் காண்டம், அசுர கண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம் ஆகியவற்றை உரையுடனும், நீதிவெண்பா விரிவுரை, கந்தரனுபூதி உரை, ஏகாதசிப் புராணக் குறிப்பு, சொற்பொருள் விளக்கம் - தமிழ் அகராதி ஆகிய நூல்களை இயற்றியுள்ளதோடு ஞானப்பிரகாச சுவாமிகளின் பிராமண தீபிகா விருத்தி, சிவஞானபோத விருத்தி, சித்தாந்தசிகாமணி ஆகிய சைவ சித்தாந்த ஏட்டுச்சுவடிகளை ம.முத்துக்குமாரசுவாமியின் அச்சிடும் முயற்சிக்குப் பரிசோதித்து உதவியுமுள்ளார்.

Resources

  • நூலக எண்: 963 பக்கங்கள் 124-126