ஆளுமை:சுப்பிரமணியம், வேலுப்பிள்ளை

From நூலகம்
Name சுப்பிரமணியம்
Pages வேலுப்பிள்ளை
Birth 1934.06.27
Place மாசார்
Category பல்துறைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் மாசாரில் (1934)பிறந்தார். இவர் 1961 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் வைத்தியராக கடமையாற்றி வருகிறார். இவர் பாம்புக்கடிகளுக்கு தமிழ் மூலிகைகளைக்கொண்டு வைத்தியம் செய்யும் திறமை கொண்டவர்.கிராமத்திலுள்ள மக்கள் தமது குழந்தைகளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லாமல் இவரிடமே வைத்தியம் செய்து வருகின்றனர். இவ்வாறாக தமிழ் மருந்து மூலம் நோய்களைக் குணப்படுத்தும் திறமை கொண்டவராக விளங்குகின்றார்.

இவர் சோதிடத்தில் வல்லவராகவும் உள்ளார். இவருக்குப் பாராட்டு விழாவில் சுகாதார மந்திரியால் வைத்தியர் விருது வழங்கப்பட்டதோடு “வைத்தியச் சக்கரவர்த்தி" விருதும் வழங்கப்பட்டது. இவர் காது, தொண்டை, சிரசு, கண், பாம்புக்கடி, பல்லுக்கொதி போன்ற நோய்களுக்கு வைத்தியம செய்பவராகக் காணப்படுவதுடன் குறிப்புப்பார்த்தல், குறிப்பு எழுதுதல், கைரேகை பார்த்தல் போன்ற விடயங்களிலும் வல்லவராக விளங்குகின்றார்.

இவை மட்டுமன்றி கோவில், கிராமம் என்பவற்றின் முன்னேற்றத்திற்காகவும் துணைநிற்கும் ஒருவராகவும் இருக்கின்றார். இவருக்கு 2022 ஆம் ஆண்டில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் “பல்துறைக்கலைஞர்" விருது வழங்கப்பட்டது.