ஆளுமை:சுந்தரலிங்கம், பொன்.
From நூலகம்
Name | சுந்தரலிங்கம் |
Birth | |
Place | புங்குடுதீவு |
Category | இசைக் கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சுந்தரலிங்கம், பொன். புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் இசைக் கலைஞர். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சங்கீத பூஷணம் பட்டம் பெற்று ரி.கே.ரங்காச்சாரி, சிதம்பரம் சிவசுப்பிரமணிய பிள்ளை, வேணுகோபால ஐயர் போன்றோரிடம் இசை பயின்றவர்.
இலங்கை வானொலியினதும் இலங்கைத் தொலைக்காட்சிச் சேவையினதும் அதி உயர்தரக் கலைஞராகத் திகழ்கின்றார். இவர் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா என்ற பல நாடுகளிலும் பிரபல்யம் பெற்றவர். இவரின் பன்னிரு திருமுறைப் பாடல்கள் 15 ஒலிப்பேழைகளாக வெளிவந்திருக்கின்றன.
சிங்கப்பூரில் இன்னிசை வேந்தர், சிட்னியில் சுருதிலய மாமணி, ஜேர்மனியில் தமிழைச் செல்வர் எனப்பல கௌரவங்களைப் பெற்றுள்ளார். இவரால் யாழ்ப்பாணத்தில் இளங்கலைஞர் மன்ற மண்டபம் நிர்மாணிக்கப்பட்டது.
Resources
- நூலக எண்: 11649 பக்கங்கள் 237