ஆளுமை:சுதந்தரன், சிறில்

From நூலகம்
Name சுதந்தரன்
Pages சிறில்
Birth 1948.09.09
Place நவாலி
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுதந்தரன், சிறில் (1948.09.09 - ) யாழ்ப்பாணம், நவாலியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சிறில். 1970 ஆம் ஆண்டில் ஆசிரியப் பணியை ஆரம்பித்து 1991 ஆம் ஆண்டில் அதிபராகப் பதவி உயர்வு பெற்று ஆனைக்கோட்டை றோ. க. த. க. பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றார்.

இவர் 1973 ஆம் ஆண்டில் கலைப்பணியை ஆரம்பித்ததுடன் நாடகம், சிறுகதை, கவிதை, நெறியாள்கை, செய்தித் தொகுப்பு, நிகழ்ச்சித் தொகுப்பு, அறிவிப்பாளர் முதலிய துறைகளில் பணியாற்றி வந்துள்ளார். கள்வனோ என் கணவன், வாய்மை காத்த மாமன்னன் முதலிய நாடகங்களை இவர் எழுதி, நெறிப்படுத்தியுள்ளார். மேலும் 1983 இல் பாரதி இன்று இருந்தால் என்னும் நடனத்திற்கு இவர் பக்கவாத்தியமும் ஒப்பனையும் செய்துள்ளார். இவர் நவாலி சனசமூக நிலையம், நவாலி ஊன்றுகோல் பணியகம், லயன்ஸ் கழகம் ஆகியவற்றில் அறிவிப்பாளராகக் கடமையாற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 167