ஆளுமை:சிவஸ்ரீ நடராஜக்குருக்கள், நாகராஜஐயர்
நூலகம் இல் இருந்து
பெயர் | நடராஜகுருக்கள் |
தந்தை | நாகராஜஐயர் |
பிறப்பு | 1940.04.29 |
ஊர் | முல்லைத்தீவு, முள்ளியவளை 2ஆம் வட்டாரம் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிவஸ்ரீ நடராஜக்குருக்கள், நாகராஜஐயர் (1940.04.29) முல்லைத்தீவு முள்ளியவளை, 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை நாகராஜஐயர்; லீலாம்பாள். தாமேதரம்பிள்ளை ஆசிரியரிடம் இசைக்கலையைக் கற்றார். 1976, 1977 ஆகிய காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதன்முதலாக வில்லிசையை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர். கலைமகள் வில்லிசைக்குழு எனும் பெயரைக்கொண்ட வில்லிசைக்குழு முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் போது வள்ளி திருமணம் எனும் தலைப்பில் முதல் முதலில் வில்லியைினை அரங்கேற்றினார். பல வருடங்களாக இவரின் இசைக்குழு முல்லைத்தீவு மாவட்டத்தில் வெற்றி நடைபோட்டது.
கந்தபுராணம், பெரியபுராணம், திருவிளையாடற் புராணம் பிள்ளையார் கதை போன்றவற்றிற்கு இவர் பயன் சொல்லியுள்ளார்.