ஆளுமை:சிவநந்தலா, கேதீஸ்வரன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவந்தலா
பிறப்பு
ஊர் சாவகச்சேரி,யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவநந்தலா, கேதீஸ்வரன் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வரணி குடமியனையில் பிறந்த கலைஞர். தற்போது இலண்டனில் வசித்து வருகிறார். ஆரம்பக் கல்வியை வரணி குடமியன் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் இடைநிலை உயர் கல்வியை கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியிலும் கற்றார். சிறு வயதில் இருந்தே சங்கீதம், நடனம், புல்லாங்குழல் ஆகியவற்றை பயின்ற இவர் ஐந்து வயதில் இருந்தே நடனத்தை விமலகுமாரி ஸ்ரீ ரவிகுலனிடமும் கற்றார். தொடர்ந்து சாந்தினி சிவநேசனிடம் நட்டுவாங்கமும் நடன பயிற்சியையும் பெற்றார். 2000ஆம் ஆண்டு வட இலங்கை சங்கீத சபையால் ஆசிரியர் தரப் பரீட்சையில் சித்தியடைந்து பரதகலா வித்தகர் பட்டத்தை பெற்றார்.

1998ஆம் ஆண்டு இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் பரதநாட்டிய பட்டப்படிப்பை நிறைவு செய்து யாழ் பல்கலைக்ழகத்தினால் நுண்கலைமாணி பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். நான்கு வருடங்கள் வரணி மத்திய கல்லூரியில் நடன ஆசிரியராக கடமையாற்றியதைத் தொடர்ந்து ஒரு வருடம் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் பணி புரிந்தார்.

புலம்பெயர்ந்து இலண்டனில் வசித்து வரும் இவர் 2008ஆம் ஆண்டு தொடக்கம் லண்டன் வெம்பிளியில் நல்லைக்குமரன் நர்த்தனாலயம் என்ற பெயரில் நடனப் பள்ளியை நடத்தி வருகின்றார். Harrow on the hill தமிழ்ப் பாடசாலையில் நடன ஆசிரியராக கடமையாற்றி வருகிறார்.