ஆளுமை:சியாமளா, சிறிதரன்
நூலகம் இல் இருந்து
பெயர் | சியாமளா, சிறிதரன் |
தந்தை | சௌந்தரநாயகம் |
தாய் | சூரியகமலா |
பிறப்பு | - |
இறப்பு | - |
ஊர் | கொடிகாமம் |
வகை | இசைக் கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சியாமளா, சிறிதரன் யாழ்ப்பாணம், கொடிகாமத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவாது தந்தை சௌந்தரநாயகம்; தாய் சூரியகமலா. 1986ஆம் ஆண்டில் அருணா இசைக்குழுவில் 5 வருடங்களும், சுகுமார் இசைக் குழுவில் 5 வருடங்களும் பாடகியாக திகழ்ந்துள்ளார். அத்துடன் இலங்கையில் பல பிரபல கலைஞர்களுடன் இணைந்து பல பாடல்களை பாடியுள்ளார். இவரின் கலைச் சேவையைப் பாராட்டி மெல்லிசைக் குயில் எனும் விருது இவருக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.