ஆளுமை:சிதம்பரம், நாகரத்தினம்
பெயர் | சிதம்பரம் |
தந்தை | நாகரத்தினம் |
தாய் | மாணிக்கவல்லி |
பிறப்பு | 1954.06.12 |
ஊர் | பூநகரி-நல்லூர் |
வகை | பஜனைப்பாடகி |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
திருமதி.சிதம்பரம் பரமேஸ்வரன் பூநகரி நல்லூரில் பிறந்தார்(1954.06.12). அப்போது கிளி/பூநகரி நல்லூர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையாக இருந்த கிளி/பூநகரி நல்லூர் மகா வித்தியாலயத்தில் தரம் 1-8வரையும் தரம் 9-11 வரை பூநகரி மகா வித்தியாலயத்திலும் கல்வி பயின்றார். இவரது தந்தையின் பெயர் கதிரவேலு நாகரத்தினம் தாயின் பெயர் கந்தையா மாணிக்கவல்லி. 10 வருடங்கள் தொண்டர் ஆசிரியராகவும் பின்னர் நிரந்தர ஆசியராகவும் சங்கீத பாடத்தை கிளி/பூநகரி நல்லூர் மகா வித்தியாலயத்திலும், கிளி/செல்லையாதீவு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் கற்பித்தார். சங்கீதத்தில் ஏற்பட்ட ஆர்வத்தில் கேள்வி ஞானத்தில் பாடல்களை பாடுவதில் ஈடுபட்டார். 25 வருடங்களுக்கு மேலாக மேளாய் அம்பாள் ஆலயம், பூநகரி நல்லூர் முருகன் ஆலயம், முக்கொம்பன் காளி கோவில் போன்ற ஆலயங்களுக்கு பஜனைப் பாடல்களையும், ஊஞ்சல் பாடல்களையும் பாடி வருகின்றார்.