ஆளுமை:சற்குருநாதன், நடராசா

From நூலகம்
Name சற்குருநாதன்
Pages நடராசா
Birth 1956.06.03
Place திருநெல்வேலி
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சற்குருநாதன், நடராசா (1956.06.03 - ) யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை நடராசா. இவர் தனது வாழ்விடமான அரசடி ஒழுங்கை, திருநெல்வேலி கிழக்கில் தர்ஷிகா கலைக்கூடத்தைஅமைத்துச் சிற்பத் தொழிலை மேற்கொண்டு வந்துள்ளார்.

இவர் சித்திரத்தேர்கள், கைலாய வாகனங்கள், திருமஞ்சங்கள் பலவற்றை யாழ்ப்பாணத்திலுள்ள சைவாலயங்களுக்கு உருவாக்கிக் கொடுத்துள்ளார். 1999 ஆம் ஆண்டு அளவெட்டி நாகேஸ்வரம் நாகவரத நாராயணர் தேவஸ்தானம் இவரின் கலைப்பணியைப் பாராட்டிக் சிற்பக் கலா சுரபி விருது வழங்கிக் கௌரவித்தது. மேலும் நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை கலைஞானச்சுடர் விருது வழங்கிக் கௌரவித்தது. இவரின் அளப்பரிய கலைப்பணிக்காகத் திருநெல்வேலி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் நிர்வாகம் இவரைப் பாராட்டிக் கௌரவித்ததோடு சிற்பஜோதி பட்டமும் வழங்கியது.

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 209