ஆளுமை:சரவணமுத்து, அருணகிரி (ஈழத்து நித்திலக்கிழார்)

From நூலகம்
Name சரவணமுத்து
Pages அருணகிரி
Pages கந்தம்மை
Birth 1890.03.27
Pages 1930.07.11
Place தாண்டவன்வெளி
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சரவணமுத்து, அருணகிரி (1890.03.27 - 1930.07.11) மட்டக்களப்பு, தாண்டவன்வெளியைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை அருணகிரி; தாய் கந்தம்மை. மட்டுநகர் அர்ச். மைக்கேல் கல்லூரியில் 8 ஆம் வகுப்பு வரை கற்றுப் பின்னர் 1916 இல் மதுரைத் தமிழ்ச் சங்கம் நடாத்திய வித்துவான் தேர்வில் தேர்ச்சிபெற்றுச் சங்கத்தின் கலைக்குழுவில் அங்கத்தவரானார்.

ஈழத்து நித்திலக்கிழார் என்ற புனைபெயரைக் கொண்ட இவர், இலங்கை அரசாங்க எழுத்தாளர் சேவையில் தேறி மட்டக்களப்புக் காட்டுக் கந்தோரில் தொழில் புரிந்தார். இயல், இசை , நாடகம் மூன்றையும் கற்ற இவர், 'பாதுகா பட்டாபிடேகம்', 'இராமர் வனவாசம்', 'இலங்கா தகனம்' ஆகிய நாடகங்களையும் எழுதியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 91
  • நூலக எண்: 2469 பக்கங்கள் 213-223
  • நூலக எண்: 963 பக்கங்கள் 108-109
  • நூலக எண்: 13816 பக்கங்கள் 221-231