ஆளுமை:சப்ரி, எஸ். எம்.

From நூலகம்
Name முகம்மது சப்ரி
Pages சால்தீன்
Pages சுலைஹா பீபி
Birth 1982.04.23
Place மாத்தளை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சப்ரி, சால்தீன் முகம்மது (1982.04.23 - ) மாத்தளையைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவரது தந்தை சால்தீன்; தாய் சுலைஹா பீபி. இவர் மா/ க/ கெப்பிட்டிய முஸ்லீம் வித்தியாலயம், மா/ க/ மாதிப்பொளை அறபா முஸ்லீம் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியற் துறையில் விசேட பட்டம் பெற்ற இவர், பத்திரிகைத் துறையில் டிப்ளோமாப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

2004 இல் எழுதத் தொடங்கிய இவர் சால்தீன் முகமது சப்ரி, கலேவலை சப்ரி, ஸப்னாஸ், கலையன்பன், முல்லையன்பன் ஆகிய பெயர்களில் கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள், கவிதைகள் எழுதியுள்ளார். இவரது படைப்புக்கள் தினகரன், நவமணி, தினச்சுடர் ஆகிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளது. அத்துடன் நவமணி, தினச்சுடர், சுடர் ஒளி செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார். ரங்வெடியாவ கிராமத்தின் வரலாறு (2002) இவரது நூல்.


Resources

  • நூலக எண்: 1673 பக்கங்கள் .55-58

வெளி இணைப்புக்கள்