ஆளுமை:சண்முகம், நாகலிங்கம்

From நூலகம்
Name சண்முகம்
Pages நாகலிங்கம்
Pages சின்னத்தாய்
Birth
Place புங்குடுதீவு
Category வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகம், நாகலிங்கம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவரின் தந்தை நாகலிங்கம். இவரன் தாய் சின்னத்தாய். இவருக்குக் கொழும்பு 4 ஆம் குறுக்குத் தெருவில் ரத்கம ஸ்ரோர்ஸ் என்ற வர்த்தக நிலையம் இருந்தது. இவர் அதன் உரிமையாளராகையால் ரத்கம சண்முகம் என அழைக்கப்பட்டார்.

இவர் தனிமனிதனாகத் தனது சொந்தச் செலவில் புங்குடுதீவு சிவன் கோவிலின் இராஜகோபுரத்தைக் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு இக்கோவிலின் கும்பாபிஷேகத்திற்காக முதன் முதலில் தென்னிந்தியப் பாடகரான சீர்காழி கோவிந்தராஜனின் இசைக்கச்சேரியை ஒழுங்கு செய்தார். அன்று சீர்காழி கோவிந்தராஜன் புங்குடுதீவில் பாடிய பாடல்கள் வானொலி மூலம் இலங்கையெங்கும் ஒலிபரப்பானது. இவர் இவ்வாறான பணிகளைச் செய்தமையால் உத்தம சோழன் எனவும் அழைக்கப்பட்டார்.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 260-261