ஆளுமை:சடாட்சர சண்முகதாஸ், சி.

From நூலகம்
Name சடாட்சர சண்முகதாஸ்
Birth
Place புங்குடுதீவு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சடாட்சர சண்முகதாஸ், சி. யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் வேலணை மத்திய கல்லூரியில் கற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியாகி, எழுபதுகளின் ஆரம்பத்தில் இலங்கை நிர்வாக சேவையில் இணைந்து உட்துறை அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராக, உள்ளூராட்சி ஆணையாளராக, உட்துறை அமைச்சின் பிரதிச் செயலாளராக, கிராம அபிவிருத்திப் பணிப்பாளராக, பேரவைச் செயலாளராக, கல்வி- கலாச்சார அமைச்சின் மேலதிகச் செயலாளராக, முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சிப் பணிப்பாளராகப் பணியாற்றினார்.

பல்கலைக்கழகத்தில் பயிலும் காலம் முதல் இலக்கிய நேசனாக விளங்கிய இவர், பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்மன்ற வெளியீடான 'இளங்கதிர்' இதழின் ஆசிரியராக விளங்கியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 10145 பக்கங்கள் 79-80