ஆளுமை:கைலாயநாதன், அம்பலவாணர்

From நூலகம்
Name கைலாயநாதன்
Pages அம்பலவாணர்
Birth 1942.08.14
Pages 1976.04.05
Place மண்டைதீவு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கைலாயநாதன், அம்பலவாணர் (1942.08.14- 1976.04.05) மண்டைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சிறந்த எழுத்தாளர். இவரது தந்தை அம்பலவாணர். அங்கையன் என்ற புனைபெயர் கொண்ட இவர், கற்கின்ற காலத்தில் எழுத்துலகில் பிரவேசித்து நாவல், சிறுகதை, கவிதை, ஓவியம், வானொலி, நாடகம் போன்ற பல துறைகளிலும் கால்பதித்துள்ளார்.

கலைப்பட்டதாரியான இவர், சிறிதுகாலம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தமிழ் வானொலி நாடகத் தயாரிப்பாளராகவும் வானொலி மஞ்சரி சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கின்றார். அத்தோடு கடற்காற்று, செந்தணல், வானம் பாடியும் சிட்டுக் குருவியும், அங்கையன் கதைகள், வைகறை நிலவு போன்ற நூல்களையும் மணிக்குரல் ஒலித்தது என்ற புகழ் பெற்ற பாடல் உட்பட 9 மெல்லிசைப் பாடல்களையும் வெளியிட்டுள்ளார்.

Resources

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 24


வெளி இணைப்புக்கள்