ஆளுமை:கிருஷ்ணபிள்ளை, சின்னையா (திமிலைத் துமிலன்)

From நூலகம்
Name கிருஷ்ணபிள்ளை
Pages சின்னையா
Pages இராசம்மா
Birth 1933.09.25
Place ஏறாவூர்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிருஷ்ணபிள்ளை, சின்னையா (1933.09.25 - ) மட்டக்களப்பு, ஏறாவூரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சின்னையா; தாய் இராசம்மா. இவர் திமிலைத் துமிலன், கிருஷ்ண பாரதி, கிருஷ்ணா, ஆலையடிச் சோலையான், பேய்மகன், இளமாலதி, மாலதி ஆகிய புனைபெயர்களிலும் ஆக்கங்களை வெளியிட்டுள்ளார்.

ஆரம்பக் கல்வியை வலையிறவு மெ. மி. பாடசாலையிலும் உயர்கல்வியை மட்டக்களப்பு மத்திய கல்லூரியிலும் கற்ற இவர், மேற்படிப்பை மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக் கலாசாலையிலும் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கொழும்பு பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார். ஆசிரியராகவும் மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

எழுத்தாளராகவும் ஓவியராகவும் பணி செய்த இவர், நீரர மகளிர், பாவலர் ஆகலாம், கொய்யாக் கனிகள், நெஞ்சம் மலராதோ இசைப் பாக்கள், அழகு முல்லை சிறுவர் பாடல் முதலான இலக்கிய நூல்களை ஆக்கியுள்ளதோடு கதம்பம், கலைச்செல்வி சஞ்சிகைகளில் ஓவியராகவும் பணி புரிந்துள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்


Resources

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 101-103
  • நூலக எண்: 13943 பக்கங்கள் 59-65
  • நூலக எண்: 2630 பக்கங்கள் 04-06