ஆளுமை:கமலேஸ்வரி, சதாசிவம்
பெயர் | கமலேஸ்வரி |
தந்தை | செல்லையா |
தாய் | மாரிமுத்து |
பிறப்பு | 1950.02.09 |
ஊர் | சிலாவத்தை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கமலேஸ்வரி, சதாசிவம் முல்லைத்தீவு சிலாவத்தையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்லையா; தாய் மாரிமுத்து. ஆரம்பக் கல்வியை முல்லைத்தீவு சிலாவத்தை பாடசாலையில் கல்வி கற்றார். பின்னர் புலமைப்பரிசில் சித்தியடைந்து இடைநிலைக் முல்லைத்தீவு சைவப்பாடசாலையிலும் உயர்தரத்தை முல்லைத்தீவு மகாவித்தியாலயத்திலும் கற்றார். சிறு வயது முதலே எழுத்துத்துறையில் ஈடுபாடு உள்ள இவர் சிறுகதை, கட்டுரை கவிதை ஆகிய துறைகளில் எழுதி வருகிறார். இவரின் ஆக்கங்கள் ஈழநாதம் பத்திரிகையிலும் புலிகளின் குரல் வானொலியிலும் வெளிவந்துள்ளன. போராளிகளினால் வெளியிடப்படும் வானம்பாடி நூலில் நினைவுகள் தொடரும் என்ற தலைப்பில் இவரின் சிறுகதை இடம்பெற்றுள்ளது. 2002-2007ஆம் ஆண்டு காலப் பகுதியில் சிலாவத்தை மாதர் சங்கத் தலைவியாக இருந்துள்ளார். இக்காலப் பகுதியில் போர்க்கால சூழலில் மக்களுக்கு முன்னின்று பல உதவிகளை செய்துள்ளார்.
விருது மன்னார் மாவட்ட மாதர் சங்க இணையம் இவருக்கு சிறந்த எழுத்தாளர் என்ற விருதை வழங்கியுள்ளது.
குறிப்பு : மேற்படி பதிவு கமலேஸ்வரி, சதாசிவம் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.