ஆளுமை:கனகலிங்கம், குழந்தை
Name | கனகலிங்கம் |
Pages | குழந்தை |
Birth | 1946.11.03 |
Place | பூநகரி |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கனகலிங்கம், குழந்தை (1946.11.03) கரியாலை நாகடுவான், பல்லவராயன்கட்டு, பூநகரி என்ற முகவரியைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை குழந்தை. யாழ்ப்பாணம் திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியில் கல்வி கற்றவர்.
1972ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்றார். தொடர்ந்து 31 வருடங்கள் அதிபராக சேவையை செய்துள்ளார். கல்வி கற்கும் காலத்தில் பாடசாலை மட்டத்தில் நாடகங்களில் பங்குபற்றி வந்தார். ஆசிரியராக இருந்த காலத்தில் காத்தவராயன் கூத்து எனும் சிந்து நடைக் கூத்தில் ஈடுபாடு உடையவராகக் காணப்பட்டார். யாழ்ப்பாணத்தில் அண்ணாவியார் நடேசன் என்பவரிடம் கூத்துப் பழகினார். பாத்திரமேற்று நடிப்பதில் கைதேர்ந்தவர் ஆனார். இவர் ஒரு பாடசாலை அதிபர் என்பதால் தமிழத்தினப் போட்டிகளில் தவறாது மாணவர்களைப் பங்குகொள்ளச் செய்தார். இவரால் நெறிப்படுத்தப்பட்ட நாட்டுக்கூத்து ஒன்று மாவட்ட மடத்தில் முதலாமிடத்தைப் பெற்றது.
இசை நாடகங்களுக்கு அப்பால் பல சமூக நாடகங்களையும் நகைச்சுவை நாடகங்களையும் மேடையேற்றியுள்ளார்.
கலைநகரி விருது – பூநகரி பிரதேச கலாசார பேரவை – 2013.
Resources
- நூலக எண்: 17074 பக்கங்கள் 97