ஆளுமை:உருத்திரன், வயிரமுத்து

From நூலகம்
Name உருத்திரன்
Pages வயிரமுத்து
Pages தங்கம்
Birth 1939.09.09
Pages 2015.06.22
Place சுழிபுரம்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உருத்திரன், வயிரமுத்து (1939.09.09 - 2015.06.22) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர். இவரது தந்தை வயிரமுத்து; தாய் தங்கம். சிறுவயது முதல் சங்கீதத்தில் நாட்டமுள்ள இவர் 1970 இல் இருந்து சங்கீதத் துறையில் ஈடுபட்டு வந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசையைப் பயின்று சங்கீதபூஷணம் பட்டம் பெற்றார். இசை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரது திறமையைப் பாராட்டி இந்து சமய கலாச்சார அலுவல்கள் அமைச்சினால் கலைஞான கேசரி பட்டம் வழங்கப்பெற்றார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 55