ஆளுமை:உமாகாந்தன், பொன்னுச்சாமி

From நூலகம்
Name உமாகாந்தன்
Pages பொன்னுச்சாமி
Birth 1964.03.20
Place கிளிநொச்சி,தொண்டமான்நகர்
Category நாடகம்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உமாகாந்தன், பொன்னுச்சாமி (1964.03.20 -) யாழ்ப்பாணம், பலாலியை பிறப்பிடமாகக் கொண்ட நாடகக்கலைஞர். இவரது தந்தை பொன்னுச்சாமி தேசியார். பிரபல்ய ஆர்மோனியக் கலைஞராக வரலாற்றில் புகழ் பெற்ற இவரது தந்தை போலவே இவரும் கலைச்சேவையை ஆற்ற உறுதிபூண்டு நாடகத்துறைக்கு தன்னை அர்ப்பணித்து சேவையாற்ற தொடங்கினார். 1953 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து கிளிநொச்சி நகர குடியேற்றத்தின் பின்னர் இவர் தொண்டமான்நகர், கிளிநொச்சியில் குடியேறினார்.

சுத்தம் சுகம் தரும், மாற்றம், இது விதியல்ல, சுகமான வாழ்வு, மதுவின் படிவு, வாடகை, மனிதம் ஒன்றே போன்ற நாடகங்களையும், சமூக சீர்திருத்த பல்வேறு கருத்துக்களையும், பெருவழி நாடகங்களையும் தயாரித்து நெறிப் படுத்தி அரங்கேற்றி நடித்து வருகின்றார்.

இவர்தம் சேவையைப் பாராட்டி மலையாளபுரம் கற்பக முத்துமாரியம்மன் ஆலயம், பாரதிபுரம் அம்மன் ஆலயம் போன்ற பல்வேறு அமைப்புகளால் கௌரவிக்கப்பட்டுள்ளார். இவரது 25 வருட கலைச்சேவையை பாராட்டி கரைச்சி பிரதேச கலாச்சார பேரவையினால் 2014 ஆம் ஆண்டுக்கான கரைச்சி பிரதேச கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதான கரைஎழில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.