ஆளுமை:அருள்குமரன், சேகராஜசிங்கம்

From நூலகம்
Name சேகராஜசிங்கம் அருள்குமரன்
Pages சேகராஜசிங்கம்
Pages சிவஞானரத்தினம்மா
Birth 1970.12.16
Place திருக்கோணமலை
Category வைத்தியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வைத்தியர் சேகராஜசிங்கம் அருள்குமரன் அவர்கள் கிழக்கு மாகாணத்தின் தொற்று நோயியல் நிபுணராக கிழக்கு மாகாண சுகாதார பணிமனையில் பணியாற்றி வருகின்றார்.

இவர் யாழ்ப்பாணத்தின் காரைநகரை பிறப்பிடமாகக் கொண்டு 16.12.1970 சேகராஜசிங்கம் மற்றும் சிவஞானரத்தினம்மா ஆகியோருக்கு இளைய மகனாக பிறந்தார். இவரது தந்தை மட்டக்களப்பு வாழைசேனை கடதாசி ஆலையில் பணியாற்றியதுடன், ஒரு சமூக செயற்பாட்டாளர் ஆவார். வாழைச்சேனை பகுதியில் தனது ஆரம்ப வாழ்க்கை கழித்ததுடன், அங்கு தனது ஆரம்பக் கல்வியை கற்றார். பின்னர் சென்ட் பற்றிக்ஸ் பாடசாலையில் உயர்தரக் கல்வியை தொடர்ந்ததுடன், யாழ் பல்கலைக்கழகத்தில் தனது மருத்துவப் படிப்புக்கு தெரிவாகி, மருத்துவப் பட்டத்தை 1998 இல் பெற்றுக் கொண்டார்.

1998 இன் பின்னர் தனது சேவையை உள்ளக மருத்துவராக மாத்தளையில் ஆரம்பித்ததுடன், அதன் பின்னர் 2000ம் ஆண்டு முதல் தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரியாக பணியாற்றினார். அதன் பின்னர் MSc பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவுடன், குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரியாக பணியாற்றிய காலப் பகுதியில் விசேட வைத்திய நிபுணராக MD in Community Medicine பூர்த்தி செய்து, பின்னர் திருக்கோணமலை பிராந்திய சுகாதார பணிமனையிலும், கிழக்கு மாகாண சுகாதார பணிமனையிலும் பணியாற்றியதுடன் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் பல்வேறுபட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதுடன், தொற்று நோய்கள் தொடர்பில் கிழக்கு மாகாணம் சார்ந்த பல வைத்திய ஆக்கங்களை, ஆய்வுகளை வெளியிட்டுள்ளார். அத்துடன் குறிப்பாக குருதிச் சோகை நோய் தொடர்பிலும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.