வன்னியர்
வன்னியர் | |
---|---|
நூலக எண் | 196 |
ஆசிரியர் | பத்மநாதன், சி. |
நூல் வகை | வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | சைவப்பிரகாச அச்சியந்திரசாலை |
வெளியீட்டாண்டு | 2003 |
பக்கங்கள் | 111 |
[[பகுப்பு:வரலாறு]]
வாசிக்க
- வன்னியர் (321 KB) (HTML வடிவம்)
- வன்னியர் (3.98 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
இலங்கையில் தமிழர் வாழும் பிரதேசங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைத் தவிர்ந்த எல்லாப் பகுதிகளும் பண்டைக் காலத்தில் வன்னியர் என்னும் சிற்றரசரின் ஆட்சியின் கீழ் அமைந்திருந்தன. எனவே இலங்கைத் தமிழரின் வரலாற்றில் வன்னியர் கொண்டிருந்த பங்கு மிகவும் முக்கியமானதாகும். அந்த உணர்வின் அடிப்படையில் உருப்பெற்ற நூல் இதுவாகும். இதிலுள்ள எட்டு இயல்களிலும் இலங்கைத் தமிழரின் வரலாற்றில் இடம்பெற்ற வன்னியரின் பங்களிப்புகள் ஆராயப் பட்டுள்ளன. வன்னியரைப் பற்றி இலக்கியங்களிலும் சாசனங்களிலும் கிடைக்கும் விபரங்கள் புலமைத்துவ நிலையில் முதலாம் இயலில் ஆய்வுக்குட்படுத்தப் படுகின்றது. வேளைக்காறப் படை பற்றிய இரண்டாம் இயலில் தமிழகத்திலும் இலங்கையிலும் மத்திய காலத்தில் சிறப்புற விளங்கிய வேளைக்காறருக்கும், வன்னியருக்கும் இடையேயான தொடர்பு விளக்கப் படுகின்றது. மூன்றாம் இயலில் 13ம் நூற்றாண்டளவில் எழுச்சிபெற்ற வன்னிச் சிற்றரசுகள் பற்றிய நூலின் பிரதான பகுதி இடம் பெற்றுள்ளது. ஏனைய நான்கு இயல்களிலும் அடங்காப் பற்று வன்னியரைப் பற்றி இதுவரை வெளிவந்த ஒல்லாந்த அதிகாரிகளின் அறிக்கைகள், வெளிவராத ஆவணச் சுவடிகள் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டு அடங்காப்பற்று வன்னியரின் வரலாறு பதியப் பட்டுள்ளன. இறுதி இயல் ஆவணச் சுவடிகள் நிலையத்திலுள்ள தமிழ் ஆவணங்களும் 18ம் நூற்றாண்டில் பனங்காமப் பற்று வன்னிபம் நல்லமாப்பாண வன்னியனார் கிழக்கு மூலையைச் சேர்ந்த கந்த உடையானுக்கு வழங்கிய நியமனப் பத்திரமும் இடம்பெறுகின்றன.
பதிப்பு விபரம்
இலங்கையில் வன்னியர். சி.பத்மநாதன். கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201 டாம் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2003. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201 டாம் வீதி). x + 177 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22x15 சமீ. ISBN- சாதாரண பதிப்பு: 955 9429 43 4, விசேட பதிப்பு: 955 9429 45 0.