சங்க இலக்கிய ஆய்வுகள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சங்க இலக்கிய ஆய்வுகள்
175.JPG
நூலக எண் 175
ஆசிரியர் சண்முகதாஸ், அருணாசலம்‎
நூல் வகை இலக்கிய வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தேசிய கலை இலக்கியப்
பேரவை
வெளியீட்டாண்டு 2002
பக்கங்கள் ix + 190

[[பகுப்பு:இலக்கிய வரலாறு]]

வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்

நூல் விபரம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்திய பேராசிரியர் க.கைலாசபதி நினைவுக் கருத்தரங்கிற் படிக்கப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு. இக்கருத்தரங்கு அமரர் கைலாசபதியின் பதினோராவது நினைவு ஆண்டான 1993இல் இடம்பெற்றது. சங்க இலக்கியத்தில் நோக்கு என்னும் செய்யுளுறுப்பு (பண்டிதர் க.சச்சிதானந்தன்), சங்க இலக்கியங்களிலே ஒழுக்கவியற் கோட்பாடுகள் (வித்துவான் க.சொக்கலிங்கம்), சங்க இலக்கியங்களில் தோழி (செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்), பழந்தமிழர் வழிபாட்டு மரபுகளும் நம்பிக்கைகளும் (கி.விசாகரூபன்), சங்கச் செய்யுள் வடிவங்களும் மொழியும் (பேராசிரியர் அ.சண்முகதாஸ்), யப்பானிய அகப்பாடல் மொழிபெயர்ப்புக்குச் சங்கப்பாடல் மரபு பற்றிய அறிவின் இன்றியமையாமை (மனோன்மணி சண்முகதாஸ்), ஈழத்திற் காணப்படும் சங்ககால முதுமக்கட் தாழிகள் (பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்), வழுக்கையாற்றுப் பிராந்தியத்திற் சங்ககாலப் படிமங்கள் (செ.கிருஷ்ணராஜா) ஆகிய எட்டு ஆய்வுக்கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இது தேசிய கலை இலக்கியப் பேரவையின் 99ஆவது நூலாகும்.


பதிப்பு விபரம்

சங்க இலக்கிய ஆய்வுகள். அ.சண்முகதாஸ் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, சவுத் ஏசியன் புக்ஸ், 44, மூன்றாம் மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்; தொகுதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2002, (கொழும்பு: கௌரி அச்சகம்). ix + 190 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22X14.5 சமீ., ISBN: 955-8637-15-7.

"https://noolaham.org/wiki/index.php?title=சங்க_இலக்கிய_ஆய்வுகள்&oldid=94955" இருந்து மீள்விக்கப்பட்டது