யாழ்ப்பாணமே ஓ... எனது யாழ்ப்பாணமே
யாழ்ப்பாணமே ஓ... எனது யாழ்ப்பாணமே | |
---|---|
நூலக எண் | 35 |
ஆசிரியர் | நிலாந்தன் |
நூல் வகை | கவிதை |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | மகிழ் |
வெளியீட்டாண்டு | 2002 |
பக்கங்கள் | vi + 38 |
[[பகுப்பு:கவிதை]]
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நூல் விபரம்
யாழ்ப்பாணத்தின் பெருமைகளையும், யாழ்ப்பாண மக்கள் எதிர்கொண்ட அழிவுகளையும் பேசுகின்றது. கவிதையாகவும், இடையிடையே விவரண உரைகளாகவும் விளக்கக்குறிப்புக்கள் கொண்டமைந்தனவாகவும் அமைந்திருக்கும் இந்தப் பரீட்சார்த்த இலக்கியத்தின் மூலம், இன்றைய யாழ்ப்பாணம் தொடர்பான ஒரு முழுமையான காட்சிப்படிமம் எம்முன் விரிகின்றது. 3 பாகங்களில் அமைந்த இத்தொகுப்பில் புதிய யாழ்பாடி, யாழ்ப்பாணம்: பாலைநிலத்தின் புதிர் (பகுதி 1க்கான உரையும் அதன் தொடர்ச்சியும்), கந்தபுராண கலாச்சாரத்திலிருந்து கரும்புலிகள் வரை ஆகிய தலைப்புக்களில் முறையே அம்மூன்று பாகங்களும் விரிகின்றன.
பதிப்பு விபரம்
யாழ்ப்பாணமே.. ஓ.. எனது யாழ்ப்பாணமே! நிலாந்தன். முல்லைத்தீவு: மகிழ், புதுக்குடியிருப்பு 4, 1வது பதிப்பு, மார்ச் 2002. (புதுக்குடியிருப்பு: வவுனியா வடக்கு ப.நோ.கூ.சங்கப் பதிப்பகம்).
vi + 38 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 100. அளவு: 22*14 சமீ.
-நூல் தேட்டம் (# 1511)