ஓடிப் போனவன்

நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:49, 18 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஓடிப் போனவன்
317.JPG
நூலக எண் 317
ஆசிரியர் நவசோதி, கணபதிப்பிள்ளை
நூல் வகை சிறுவர் இலக்கியம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தமிழ்ச் சங்கம்-கண்டி
வெளியீட்டாண்டு 2003
பக்கங்கள் 80

வாசிக்க

நூல்விபரம்

இலங்கையின் முதலாவது நவீன சிறுவர் நாவல் என்று கருதப்பட்ட இது புத்தொளி வெளியீடாக 1968இல் முதற் பதிப்பைக் கண்டது. வீட்டை விட்டு ஓடிச்செல்லும் வசந்தன் என்ற சிறுவனின் பாத்திரத்தின் வாயிலாக தாய்ப்பாசம், பிறர்க்குதவி செய்தல், செய்த தவறுக்காக மன்னிப்பைக் கோரல் தனக்காக பிறர்படும் துன்பத்தைத் தாங்காமை போன்ற பண்புகளை உணர்த்தி நிற்கும் இந்தநாவல், மாணவர்களுக்கான நல்லொழுக்க போதனைகளைத் தரும் விறுவிறுப்பான கதையம்சம் கொண்டது. பேராதனைப் பல்கலைக்கழக சிறப்புப் பட்டதாரியான அமரர் கணபதிப்பிள்ளை நவசோதி (2.4.1941-4.1.1990) கதைப்பூங்கா என்ற பல்கலைக்கழக சிறுகதைத் தொகுப்பின் தொகுப்பாசிரியராக இருந்ததுடன், வெண்ணிலா, தமிழோசை, சிந்து (லண்டன்) ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் இருந்தவர். விரிவுரையாளராக, மொழிபெயர்ப்பாளராக, சுவடித் திணைக்கள நெறியாளராக, அகழ்வாராய்ச்சியில் நாட்டம் கொண்டவராக, நூலகராக, ஒலிபரப்பாளராகவென்று பல்வேறு பரிமாணங்களில் நின்று தன்னை இனம்காட்டியவர்.


பதிப்பு விபரம்
ஓடிப்போனவன். க.நவசோதி. கண்டி: கண்டி தமிழ்ச் சங்கம், த.பெ.எண். 32, 2வது பதிப்பு, டிசம்பர் 2003, 1வது பதிப்பு, டிசம்பர் 1968. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், 48B, புளுமெண்டால் வீதி). 80 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 17.5 *12 சமீ. (ISBN 955 9084 19 6).


-நூல் தேட்டம் (2442)

"https://noolaham.org/wiki/index.php?title=ஓடிப்_போனவன்&oldid=652592" இருந்து மீள்விக்கப்பட்டது