நிறுவனம்: உயர் தரமாணவர் மன்றம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:02, 27 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=உயர் தரம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் உயர் தரமாணவர் மன்றம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி
வகை மன்றம்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர்
முகவரி அரசடி வீதி, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம் www.jhlc.sch.lk

வளங்கள்

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் உயர் தர மாணவர் மன்றமானது க.பொ.த உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களிடையே பொது அறிவையும், ஆற்றலையும், திறமையையும் சிறந்த மனப்பாங்கையும், புரிந்துணர்வுகளையும் வளர்க்கும் முகமாக நிறுவப்பட்டது. இவற்றின் செயற்பாடுகளாக.

இம் மன்றத்தின் இலக்கை அடைவதற்காக மாதந்தோறும் வெள்ளிக் கிழமைகளில் ஒன்று கூடுகிறோம்.

இங்கு மாணவர்களின் ஆக்க பூர்வமான முயற்சிகளுக்கு இடமளிக்கப்படுகிறது. இதனால் மாணவர்களின் திறமைகள் பலவழிகளிலும் வெளிப்படுத்தப்பட்டு அவர்களது ஆளுமை, தலைமைத்துவப் பண்பு, சேவை மனப்பான்மை என்பனவும் வளர்க்கப்படுகின்றன.

பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகளை நடாத்துவதோடு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் புலமைசார்ந்த அறிஞர்களின் உதவியோடு மாணவருக்கு பயன்தரும் கருத்தரங்குகுகளை ஒழுங்குசெய்கிறது.

வருடாவருடம் மாணவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வுகளையும் பிற பாடசாலைகளிலிருந்து வரும் மாணவப் பிரதிநிதிகளுடன் ஒன்றுகூடல் நிகழ்வுகளையும் நடாத்துகின்றது.

உயர்தர வகுப்பு மாணவர்கள் எதிர்காலத்தில் அடையவேண்டிய பலவகைத் தேர்ச்சிகளை விருத்திசெய்யும் வகையில் இம்மன்றம் சிறப்பான பணிகளை ஆற்றுகின்றது.