நிறுவனம்: ஆசிரியர் கழகம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:39, 27 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=ஆசிரியர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஆசிரியர் கழகம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி
வகை கழகங்கள்
நாடு -
மாவட்டம் -
ஊர் -
முகவரி -
தொலைபேசி {{{தொலைபேசி}}}
மின்னஞ்சல் {{{மின்னஞ்சல்}}}
வலைத்தளம் {{{வலைத்தளம்}}}

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் ஆசிரியர் கழமானது யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் சேவையாற்றும் அனைத்து நிரந்தர ஆசிரியர்களை நிரந்தர அங்கத்தவர்களாகவும், ஏனைய ஆசிரியர்கள், கல்வி சார் ஊழியர்கள் ஆகியோரை கௌரவ அங்கத்தவர்களாகவும் கொண்டிருக்கின்றது. ஆசிரியர்களுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வு , நல்லுறவு, கூட்டுமனப்பன்மை என்பவற்றை வளர்ப்பதும், ஆசிரியரது ஆளுமை விருத்திக்கு உதவுவதுமே இம் மன்றத்தின் நோக்கமாகும். ஆசிரியர் கழகமானது ஆரம்ப காலங்களில் ஆசிரியர் மன்றம் என இருந்து பின்னர்தான் ஆசிரியர் கழகமாக மாறியது. இம் மன்றத்தின் செயற்பாடுகளில் உதாரணங்களில் சில.

  • இம் மன்ற அங்கத்தவர்களுடைய இன்ப துன்பங்களில் கலந்து கொண்டு ஆவன செய்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
  • இம் மன்றமானது சேவையில் இருந்து இளைப்பாறுபவர்களையும் மாற்றலாகிச் செல்பவர்களையும் பதவி உயர்வு பெறுபவர்களையும் பாராட்டி கௌரவிப்பதிற் தவறியதில்லை.
  • ஆண்டு தோறும் சட்டநாதர் கோயிலில் இக் கல்லூரி ஸ்தாபகர் திருமதி சிவகுருநாதன் விசாலாட்சி அம்மையாருக்கு நன்றி பாராட்டும் வகையில் இரண்டாம் திருவிழாவை செய்து வருவதுடன் திருக்கேதீஸ்வர ஆலயத் திருவிழாவிற்குனம் நிதியுதவி செய்து வருகின்றார்கள்.
  • இம் மன்றமானது இலக்கை அடைவதற்கு அனைத்து அங்கத்துவர்களும் தம்மாலியன்ற ஒத்துழைப்பை நல்கி வந்துள்ளனர்.
  • ஆசிரியர் கழகத்தினால் இவ்வருடம் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள்
  • 2024 ஆம் ஆண்டின் சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது.
  • சிற்றுண்டியும் பரிசில்களும் (பேனா) வழங்கி மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர்.
  • ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு சேவை நலன் பாராட்டி கௌரவித்தல்.
  • இவ்வருடம் ஆசிரியர் சேவையில் 25 வருடங்களைப் பூர்த்தி செய்த ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
  • ஆசிரியர்களின் இன்ப துன்ப நிகழ்வுகளில் கலந்து உரிய பங்களிப்பு வழங்கப்பட்டது.
  • இக் கல்லூரிக்கு மருத்துவ உதவி நாடி வந்தவர்களிக்கும் உதவி அழித்தமை.
  • வெள்ள நிவாரண உதவியாக உடுபுடைவைகளையும் பண உதவியும் வழங்கி வந்துள்ளது.
  • மானுட விடியல் கழகத்திற்கும் தினக்குரல் கருணைப் பாலத்திற்கும் இக் கழகம் நிதியுதவி வழங்கித் தனது சேவையைச் சிறப்புற நடாத்தியது.