நிறுவனம்: மாணவர் பாராளுமன்றம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:43, 9 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=இன்ரறக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இன்ரறக்ட் கழகம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி
வகை -
நாடு -
மாவட்டம் -
ஊர் -
முகவரி -
தொலைபேசி {{{தொலைபேசி}}}
மின்னஞ்சல் {{{மின்னஞ்சல்}}}
வலைத்தளம் {{{வலைத்தளம்}}}

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றம் பாராளுமன்றமானது 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இம்மன்றமானது மாணவியர்களுக்கு சனநாயகம், அதன் பொறுப்புக்களும் வகை கூறலும் என்பன பற்றியும் சட்டத்தின் ஆதி பத்தியம், வாக்கு, வாக்களித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றியுமான செயல்முறை அறிவைப் பெறு உதவுவதோடு மாணவர்களுக்கு எதிர்கால பிரசை என்ற வகையில் மனித சமூகத்தின் பல்வேறு செயற்பாடுகளுக்கு இசைவடையத்தக்க தேர்ச்சியைப் பெறுவதற்கும், திறன் உரையாடல், ஏனையோர் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கை வழங்கி சமூக ஒருமைப்பாட்டை உருவாக்குவதற்காகவும் இம் மன்றம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பத்து அமைச்சுக்கள் செயற்பட்டு வருகின்றன அவற்றினையும் அதன் செயற்பாடுகளின் சில உதாரணங்களும் பின்வருமாறு.

1.மாணவர் நட்புறவு விருத்தி மற்றும் மாணவர் நலன்புரி அமைச்சு

  • யாழ்ப்பாணத்தில் உள்ளபுவியியல் ரீதியான இடங்களை பார்வை இடுவதற்கான களபயணம் சென்றமை தமிழ்மன்றம், விஞ்ஞான மன்றம், இந்து மன்றம், ஆங்கில மன்றம் மற்றும் இன்ரறக்ட் கழகம், லியோ கழகம், போன்றவற்றின் செயற்பாட்டுக்கு உதவுதல்.

2. மாணவர் தேர்ச்சி மற்றும் புத்தாக்க அலுவல்கள் அமைச்சு

  • கண்காட்சி நடத்தல் (பாடசாலை மட்டத்தில்)
  • விளையாட்டு போட்டியின்போது புத்தாக்கப்போட்டி நடத்துதல்
  • யாழ் இந்துக் கல்லூரி புத்தாக்க நிகழ்வில் பங்குபற்றியமை

03.பாடசாலைகளுக்கிடையேநட்புறவை கட்டியெழுப்பும் மற்றும் அபிவிருத்தி செய்யும் அமைச்சு

  • அயல் பாடசாலைகளின் வைபவங்கள், நிகழ்வுகளில் பங்குபற்றல்

04. கல்வி மனிதவள அபிவிருத்திமற்றும் தகவல் தொடர்பாடல் அமைச்சு

  • பொதுஅறிவு நிகழ்வுகளை காலைப் பிரார்த்தனையின்போது வழங்குதல்
  • தகவல்தொடர்பாடல் தொடர்பான பயிற்சி வழங்கல்

05. பண்பாட்டு சமய அலுவல்கள் மற்றும் விழுமிய மேம்பாட்டு அமைச்சு

  • வெள்ளிக்கிழமைகளில் காலைப்பிரார்த்தனையின் போது மாணவர்களாலும், ஆசிரியர்களாலும் நற்சிந்தனை வழங்கல்
  • ஆலயப்பகுதி சுத்தப்படுத்தல், பூந்தோட்டம் அமைத்து பராமரித்தல்.


06. சமூக நல்லிணக்கம் மற்றும் மாணவர் பாதுகாப்பு நடவடிக்கைகள் அமைச்சுசெயற்பாடு

  • விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்க வீதி சமிஞ்ஞைகளை பயன்படுத்தல்
  • தாய், தந்தை இழந்த பிள்ளைகளுக்கு உதவுவதற்காக அரியாலை சிறுவர் இல்லம் (SSR) சென்று அவர்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கியும் மகிழ்விக்கும் நிகழ்வுகளும் நடத்தியமை
  • பாடசாலைக்கு 7.15ற்கு பின்வரும் மாணவர்களை ஒழுங்குபடுத்தல், நேரமுகாமைத்துவம் பேணல்.

7. சமுதாயத்தொடர்பு, அபிவிருத்திமற்றும் சமுதாய சேவைகள் அமைச்சு

  • அனாதைகள் சிறுவர் இல்லம் சென்றமை|
  • பெற்றோர் சந்திப்பை மேம்படுத்தல்
  • நிகழ்வுகளுக்கு பெற்றோர், பழைய மாணவர் உதவி பெற அழைத்தமை

8. சுகாதார போசாக்கு மற்றும்விளையாட்டு அலுவல்கள் அமைச்சு

  • பாடசாலை மாணவரிடையே சுகாதாரம் பேணும் முகமாக உடல் சுத்தம் பேண நடவடிக்கை எடுத்தல்
  • மலசலகூடம் போன்றவற்றின்செயற்பாட்டை கண்காணித்து நிர்வாகத்துக்கு அறிவித்தல்
  • டெங்கு போன்றநோய் வராமல் தடுப்பதற்கு நுளம்பு பெருகும் இடங்களை அவதானித்து. அமைச்சின் ஊடாக செயற்படுத்தல்

9. விவசாயமற்றும் சூழல் அபிவிருத்தி அமைச்சு

  • பாடசாலை வளாகத்தில் பூக்கன்றுகளை நாட்டி பராமரித்தல்
  • பாடசாலை தோட்டத்துக்கு உதவுதல்

10. பௌதீக வள அபிவிருத்தி மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு

  • பாடசாலைபௌதீக வளங்களை பாதுகாத்தல்
  • பொலித்தீன் பாவனையை குறைத்தல்
  • உரிய கழிவு முகாமைத்துவத்தை பேணல்