நிறுவனம்: கூட்டுறவு விநியோகச் சங்கம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:50, 8 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=கூட்டுற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | கூட்டுறவு விநியோகச் சங்கம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி |
வகை | கழகம் |
நாடு | - |
மாவட்டம் | - |
ஊர் | - |
முகவரி | - |
தொலைபேசி | - |
மின்னஞ்சல் | - |
வலைத்தளம் | - |
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் கூட்டுறவு விநியோகச் சங்கமானது 1951 இல் ஸ்தாபிக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பாடசாலைகளில் முதலில் தோன்றிய கூட்டுறவுச் சங்கம் இதுவாகும். இச் சங்கம் கூட்டுறவு திணைக்கள விதிமுறைகளுக்கிணங்க கல்லூரி அசிரியர்களையும் மாணவர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டு இயங்கிவந்தது.
இச் சங்கத்தின் பிரதான குறிக்கோள்களாக அதன் செயற்பாடுகளில் மாணவர்கள் கலந்துகொள்வதன் மூலம் கூட்டுறவின் நோக்கங்களையும், அவசியத்தையும் விளங்கிக்கொள்ளச் செய்வதும் மாணவர்களுக்குத் தேவையான கொப்பிகள், காலுறைகள், பேனைகள், பென்சில்கள் போன்ற தேவையான பாடசாலை உபகரணங்களை விநியோகிப்பதும், சிற்றுண்டி வகைகளை மலிவான விலையில் விற்பனை செய்வதும் ஆகும்.
இச் சங்கத்தின் ஆரம்பத்தில் நடத்துனராக இருந்த செல்வி விமலா தங்கராசா கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதற்கு அமைய சேவையை திறம்படச் செய்துவந்துள்ளார்.
வருடாவருடம் கணக்காய்வாளர்கள் வரவு செலவுக் கணக்குகளைச் சரிபார்த்து வருகின்றனர்.
இச் சங்கத்தில் கிடைக்கும் இலாபம் வங்கியில் வைப்புச் செய்வதுடன் ஒரு பகுதி கல்லூரி பரிசளிப்பு விழாச் செலவுக்கும் வழங்கப்படும்.