நிறுவனம்: லியோ கழகம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:38, 8 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=லியோ கழக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் லியோ கழகம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி
வகை கழகம்
நாடு -
மாவட்டம் -
ஊர் -
முகவரி -
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் லியோ கழகமானது முதன் முதலாக 1992.10.23 ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் இக் கல்லூயில் முப்பத்திமூன்று உறுப்பினர் ஒன்றுகூடி லயன்ஸ் கழகத்தலைவர் லயன் திரு. எஸ். இராஜேஸ்வரன், லியோ ஆலோசகர், லயன் டாக்டர் . வி. யோகநாதன் ஆகியோரின் உரைகளின் பின் லியோ கழகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இக் கழகத்தினால் 1992 ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை நிறைவேற்றப்பட்ட செயல்திட்டங்களில் சில உதாரணங்கள் சில பின்வருமாறு.

பாடசாலையின் பிரதான மண்டபத்தின் முன்பக்கம் துப்பரவு செய்யப்பட் டது, மரம் நாட்டு விழா நடைபெற்றது.

இடம்பெயர்ந்தோருக்கு உதவும் முகமாக பொதுமக்களிடம் இருந்து ஆடைகள் சேகரித்தது

உரும்பிராய் ஞானசம்பந்தர் இல்லத்திற்கு சென்று ஆடைகள், உணவுப் பொருட்கள், பாடசாலை உபகரணங்கள் விளையாட்டுப் பொருட்கள் என் பவற்றை அன்பளிப்புச் செய்தும், அவர்களோடு அங்கு ஒரு நாள் தங்கி இருந்தும் வந்தார்கள்.

சேகரித்த ஆடைகளை உரும்பிராயில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாமிற் குச் சென்று அங்குள்ளவர்களுக்கு பகிர்ந்தளித்தது.

பாடசாலை விஞ்ஞான ஆய்வுகூடங்கள் துப்புரவு செய்யப்பட்டது.

சிற்றுண்டி தயாரித்து விற்பனை செய்து நிதி திரட்டப்பட்டது.

லயன் கழக குழு ஆதரவுடன் ஒன்றின் மூலம் 450 மாணவர்களினதும், ஆசி ரியர்களினதும் வைத்தியப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வைத் தியப் பரிசோதனை அறிக்கை வழங்கப்பட்டது.

திருநெல்வேலியில் அமைந்துள்ள சைவச்சிறார் நிறைவாழ்வு இல்லத் திற்குச் சென்று அவர்களின் சுற்றாடலைத் துப்புரவு செய்து கொடுத்த துடன் அவ்வில்லத்தில் தங்கி உள்ள சிறார்களின் மதிய போசனத்திற்காக ரூபா 1000/- ஐயும் வழங்கியது.

திரைப்படக்காட்சி காண்பிக்கப்பட்டு கழகத்தின் செயற்பாட்டிற்காக நிதி சேகரிக்கப்பட்டது.

ஜெய்ப்பூர் செயற்கைக்கால் தொழிற்சாலைக்கு நிதி வழங்கும் முகமாக கைலாசபதி கலையரங்கில் கலை நிகழ்ச்சியை நடாத்தி பணம் சேகரித்து ரூபா 10,000/- ஐ ஜெய்ப்பூர் நிறுவனத்தினரிடம் கையளித்தார்கள்.

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியிலுள்ள வறிய மாணவர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பாதணிகள், கொப்பிகள் வழங்குகின்றது.

பாடசாலையில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு மண்டப ஒழுங்குகள், சுற்றாடல் சுத்தம், அலங்கரிப்பு போன்றவற்றிற்கு உதவுகின்றது.

விஞ்ஞான ஆய்வுகூடங்களின் துப்பரவிற்கு உதவிசெய்கின்றது.

வதிரியிலுள்ள ஸ்ரீபரமானந்தா ஆச்சிரமத்திற்குச் சென்று அங்குள்ள வறிய அநாதைக் குழந்தைகளுக்கு பாடசாலை உபகரணங்கள், விளையாட்டுப் பொருட்கள் என்பவற்றை வருடாவருடம் அன்பளிப்புச் செய்கின்றது.

தனது செயற்பாடுகளுக்கு சிறப்பு வைபவங்களின் போது சிற்றுண்டிகள், குளிர்பானம் விற்பனை செய்வதன் மூலம் நிதி திரட்டுகிறது.

2003 ஆம் ஆண்டின் செயற்பாட்டில் சதுரங்கப் போட்டியை ஊக்குவிக்கும் முகமாக சதுரங்கப் பலகை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டு சைக்கிளில் வரும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உதவும் முகமாக காற்றடிக்கும் பம்பி ஒன்றும் இக் கழகத்தினால் வழங்கப்பட்டுள்ளது. 

இக் கழகமானது 2001-2002 ஆண்டு யாழ் மாவட்டத்தின் சிறந்த சேவைக் கழகமாக தெரிவுசெய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இக் கழகானது வசதி குறைந்த மாணவர்களுக்கு காலணிகளையும் உடைகளைகளையும் வழங்கியுள்ளது.

தொல்புரத்திலுள்ள சிவபூமி முதியோர் இல்லத்திற்குச் சென்று அவர்களுக்குச் சிற்றுண்டி உட்பட அத்தியவசியப்பொருட்களை வழங்கியதுடன் அவர்களுடன் அன்பாக அளவாவி மகிழ்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பாடசாலை விளையாட்டு மைதானத்தைச் சிரமதானம் மூலம் துப்பரவு செய்ததுடன் பாடசாலையில் நடைபெறும் வைபங்களில் ஒழுங்கமைப்பு வசதிளையும் மேற்கொண்டு வந்தது.

தருமபுரம் இனிய வாழ்வு இல்ல மாற்றுத் திறனாளிகளுக்கு அன்பளிவழங்கியமை பாடசாலை மாணவி இருவருக்கு மூக்குக் கண்ணாடி பெற்றுக் கொடுத்தமை.

மாணவர்களிடையே சேவை மனப்பான்மையை வளர்க்கும் முகமாக கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்லம் சென்று அவர்களை மகிழ்விக்கும் முகமாக நிகழ்வுகளை நடாத்தி பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

பொலிஸாரினால் நடாத்தப்பட்ட வீதி ஒழுங்கு கருத்தரங்குகளில் பங்குபற்றி பாடசாலை முன்பாக கழக மாணவர்களினால் வீதி ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்பட்டது.

பொலித்தீன் பாவனையை தடை செய்யும் முகமாக பதாதைகள், சுவரொட்டிகள் தயாரித்து காட்சிப்படுத்தப்பட்டது.

பாடசாலையில் கழிவு முகாமைத்துவத்திற்கான ஒத்துழைப்பு வழங்கப்பட்டது