நிறுவனம்: இந்து மன்றம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:31, 8 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=இந்து மன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இந்து மன்றம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி
வகை மன்றம்
நாடு -
மாவட்டம் -
ஊர் -
முகவரி -
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் இந்து மன்றமானது இவ் உலகின் நல்வாழ்விற்குச் சமய அறிவின் துணை அவசியம், இவ்அரிய சமயத்தின் அரிய பெரிய கருத்துக்களை மாணவிகட்கு உணர்த்தி நல்வழிப்படுத்துவதே இம் மன்றத்தின் நோக்கமாகும்.

இம் மன்றத்தின் சார்பில் நடத்தப்படும் கூட்டங்களில் அறிவிற்சிறந்த பெரியார்களும் மாணவிகளும் பங்கு பற்றுகின்றனர்.

பெரியார்கள் சைவ சமயத்தின் வளர்ச்சியின் பொருட்டு சொற்பொழிவுகளை ஆற்றியிருக்கின்றனர்.

மேன்மை கொள்சைவநீதி விளங்க அவதரித்த நாயன்மார்களின் குருபூசைகளையும் விழாக்களையும் சிறப்பாக நடாத்தி| அந்நாட்களிற் கருத்து நிறைந்த சொற்பொழிவுகளையும் நடாத்தி வந்துள்ளனர்.

கல்லூரியில் இடம்பெறும் சமய விழாக்களையும் நடுத்தோட்ட இராஜவரோதய ஆலய நிகழ்வுகளையும் இந்துமன்றம் பொறுப்பெடுத்து சிறப்பாக வருடாவருடம் நடாத்தி வருகின்றது.

கல்லூரியின் சைவ விழாக்களின் நிகழ்வுகள் சிவராத்திரி விழாவுடன் ஆரம்பமாகி, நால்வர் குருபூசைத் தினங்களையும் சிறப்புடன் நடாத்தி, நவராத்திரி விழாவுடன் நிறைபெறுகின்றன.

மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் பேச்சாளர்களை வருவித்தும் ஒழுங்குசெய்யப்படும் இந் நிகழ்வுகள் மாணவரிடையே சைவப்பற்று, தமிழ்ப்பற்று, இறை நம்பிக்கை என்பவற்றை வளர்க்கப் பெரிதும் உதவுகின்றன.

வாணிவிழா நிகழ்வின் போது சிறப்பு ஆராதனைகளும் கோலப் போட்டி, மாலை கட்டும் போட்டி என்பனவும் நடாத்தப்பட்டு மாணவருக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்படுகின்றன.

மாணவரிடையே சைவ அறிவை வளர்க்கும் பொருட்டு சைவபரிபாலனசபைப் பரீட்சை, மற்றும் தனியார்.சமயப்போட்டிப் பரீட்சைகள் ஆகியவற்றிற்கு மாணவர்களைப் பங்குபெறச் செய்து இதில் மாணவர்கள் தங்கப்பதக்கங்களையும் பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வந்தமை.

குரு பூசைகள், விசேட தினங்கள், பாடசாலை, ஆலய சங்கா |பிசேகம் நடாத்துதல், போட்டிகள்! நடாத்தல், நாவலர் சிலை ஸ்தாபிக்கப்பட்டு குருபூசை நடாத்தப் பட்டது. மாணவிகளுக்கு தீட்சை வழங்கப்பட்டது.

சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றியஆ றுமுகநாவலர்பெருமானின் குருபூசை தினமும் சிறப்புற அனுஷ்டிக்கப்பட்டு மாணவர்கள். ஆசிரியர்களது சிறப்பு சொற்பொழிவுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

சமூக நிறுவனங்களால் நடாத்தப்படும் சமயப் போட்டிகளிலும் மாணவர்கள் பங்குபற்ற ஊக்குவிக்கப்படுகின்றனர். க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைக்கான கருத்தரங்குகள், செயலமர்வுகள் என்பனவும் எமது மன்றத்தால் ஒழுங்கமைக்கப்பட்டு வருகின்றது.

மாணவர்களுக்கு உளநல மேபாட்டை ஏற்படுத்தும் வகையில் யோகாசனப் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றது.