நிறுவனம்:தி/ சாகிரா கல்லூரி
பெயர் | தி/ சாகிரா கல்லூரி |
வகை | பாடசாலை |
நாடு | இலங்கை |
மாவட்டம் | திருகோணமலை |
ஊர் | திருகோணமலை |
முகவரி | தி/ சாகிரா கல்லூரி, திருகோணமலை |
தொலைபேசி | 0262222774 |
மின்னஞ்சல் | - |
வலைத்தளம் | - |
திருகோணமலை சாகிரா கல்லூரி திருகோணமலை நகரில் காணப்படுகின்ற ஒரே ஒரு முஸ்லிம் பாடசாலை திருகோணமலை சாகிரா கல்லூரி ஆகும். இந்தப் பாடசாலை திருகோணமலை சோனகவாடி பகுதியில் அமைந்துள்ளது. 1957ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த பாடசாலை ஆனது திருகோணமலை நகரை மையப்படுத்திய முஸ்லிம் சமூகத்தினருக்கு அவர்களின் கல்வியை உறுதி செய்ய முக்கிய இடமாக விளங்குகின்றது.
இந்த பாடசாலையானது ஆரம்ப காலகட்டத்தில் தமிழ் அதிபர்களால் கொண்டு நடத்தப்பட்டது. தற்பொழுதும் பல தமிழ் ஆசிரியர்கள் இன, மத பேதம் இன்றி குறித்த பாடசாலையும் வளர்ச்சியில் தொடர்ச்சியாக பங்களித்து வருகின்றனர்.
2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் உயர்தரத்தில் பல்வேறுபட்ட சாதனைகளை நிகழ்த்தி வரும் இந்த பாடசாலை ஆனது பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி சங்கம் என்பவற்றின் ஒத்துழைப்புடனும், சமூகத்தின் ஒத்துழைப்புடன் வினைத்திறனாக இயங்கி வருகின்றது.
பாடசாலையின் அதிபர்களின் பெயர்கள்:-
கே. சோமசுந்தரம் (1957-1958), திருமதி பி. குமாரசாமி (1958-1959), பி. அசீஸ் (1959-1968), ஏ. ஆதம்பாவா (1968-1970), எஸ். எஸ். முகம்மது (1970-1971), ஏ. ஆர். இலியாஸ் (1971-1972), எம். ஏ. ஜப்பார் (1972-1978), எஸ். எம். மக்கீன் (1978-1981), ஏ. ஆர். இலியாஸ் (1981-1988), எம். எம். சலீம் (1988-1990), ஏ. அன்வர்தன் (1990-1995), எஸ். எம். முகம்மது அலி (1995- 2003)