நிறுவனம்:அம்/ முனையூர் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயம்

நூலகம் இல் இருந்து
Thanujah (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:18, 1 ஜனவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=முனையூர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முனையூர் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் அம்பாறை
ஊர் தம்பிலுவில்
முகவரி தம்பிலுவில், திருக்கோவில், அம்பாறை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


தம்பிலுவில் முனையூர் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயம் அம்பாறை மாவட்டம் தம்பிலுவில் கிராமத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயம் முதன் முதலில் களுதாவளை சிவலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் வடபுறமாக 1976ம் ஆண்டு சிறியதொரு கட்டடமாக அமைக்கப்பட்டு 1977ம் ஆண்டு வரை சடங்கு உற்சவம் நடைபெற்றன.

பின்பு காளி தேவியின் அகோர தோற்றப்பாடுகளுக்கு பொது மக்கள் அச்சமுற நேரிடலாம் என அஞ்சி பிரதான வீதியை விடுத்து விஸ்வகுல மக்கள் செறிந்து வாழும் முனையூருக்கு மாற்றி அமைக்கலாம் எனப் பொது மக்களது பொது அபிப்பிராயம் மேலெழுந்தது.

இதனால் முனையூரில் வட பத்திரகாளியம்மன் ஆலயம் அமைக்க இடம் தேடப்பட்டது. இவ்வேளையில் தம்பிலுவிலைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை சுந்தரமூர்த்தி தனக்கு சொந்தமான ஓர் காணித்துண்டினை முனையூரில் ஆலயம் அமைக்க கொடுத்தார். இந்தக் காணியில் 1978ம் ஆண்டு 8ம் மாதம் கிடுகினால் வேயப்பட்ட ஒரு அமைவிடத்தில் முறையான சடங்கு நடைமுறைகள் மூன்று நாள் நடைபெற்று தீ மிதித்தலுடன் நிறைவு பெற்றது.

தொடர்ந்து இந்த இடத்தில் ஆண்டு தோறும் ஆவணிமாத பெளர்ணமிக்கு சில நாட்கள் முன்பாக நிறைவுபெறக் கூடியவாறு நடைபெறும். இதன் 2024ம் ஆண்டுக்குரிய வருடாந்த ஆண்டு திருவிழா கடந்த 13ஆம் திகதி இடம்பெற்றது. இத் திருவிழாவில் பாற்குடபவனியும் வீரகம்பம் வெட்டுதல், வீதி உலா, சக்திமகா பூஜை இடம்பெறுவதுடன் அதன் பின் தீமிதிப்பு இடம்பெறும். பால்பொங்கல் இரவு இடம்பெறும் வைரவர் வேள்வியுடனும் கிரியைகளுடனும் நிறைவுறும்.