நிறுவனம்:அம்/ ஶ்ரீ காயத்ரீ ஆலயமும் தபோவனமும்

நூலகம் இல் இருந்து
Thanujah (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:15, 1 ஜனவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=ஶ்ரீ காய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஶ்ரீ காயத்ரீ ஆலயமும் தபோவனமும்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் அம்பாறை
ஊர் தம்பிலுவில்
முகவரி தம்பிலுவில், அம்பாறை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


ஶ்ரீ காயத்ரீ ஆலயமும் தபோவனமும் தம்பிலுவில் வட எல்லையில் களுதாவளை சிவலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக பாரதத்தின் வடநாட்டுப்பாணி – ஆரியரது ஆலய அமைப்பு விதி முறைகளுக்கேற்ப உருவாக்கப்பட்டு அமையப்பெற்றுள்ளது. இந்த பெரும் தபோவனத்துள் தென் கிழக்குக் கோடியில் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ள மண்டபம் தான் குருபீடமென்கின்ற தவச் சாலையாகும்.

கடந்த 1992ம் ஆண்டு ஏப்ரல் மாதம் காயத்ரீசித்தர், சுவாமி முருகேசு அவர்களின் கிழக்கிலங்கைக்கான இரண்டாவது வருகை மட்டுநகரில் இருந்து திருக்கோவில் பிரதேசம் வரை நீண்ட பெரும் பயணம் இதுவாகும். அப்போது தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஸ்தாபகர் அதிபர் நல்லாத்மா தம்பையா அடிகளார் அவர்களின் அழைப்பின் பேரில் திருக்கோவில் விஜயம் செய்தார். அங்கு காயத்ரீ மகிமை பற்றி எல்லோருக்கும் விளக்கமளித்ததுடன் இங்கு ஆலயம் அமைக்கவேண்டுமென எல்லோருக்கும் அவா உண்டானது.

இதன் அடிப்படையில் தம்பிலுவில் முதலாம் குறிச்சியில் வசிக்கும் சுப்பிரமணியம் வேல்நாயகம் எனும் ஆசிரியர் முருகேசு சுவாமி அவர்களின் நெருங்கிய பக்தரான பொறியியலாளர் ரவீந்திரன் அவர்கள் அவ்வேளை தந்துதவிய ஒரு தொகை பணத்தினை பெற்றுக் கொண்டு தனது காணியை முருகேசு சுவாமி அவர்களின் பெயரில் உறுதி முடித்துத் தந்தார். அதன் பின் அங்கு ஆலயம் அமைக்கப்பட்டு 13 பேர் அடங்கிய ஒரு நிர்வாகக்குழு தோற்றுவிக்கப்பட்டது. பின் தொடந்து சுவாமியின் வருகையும் பல ஆன்மீக செயற்பாடுகளின் காரணமாக புதிய பல கட்டிடங்கள் பல கட்டப்பட்டன.

இங்கே வியந்து பேசத்தக்கதாக தவ சிரேஸ்டர் சிவபால யோகி மகராஜ் அவர்களால் புனிதமான நர்மதா நதியில் பெறப்பட்ட சக்தி வாய்ந்த பாசு பதேஸ்வரர் லிங்கம் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பல தெய்வ மூர்த்தங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளன. அதனோடு குருபீடம், மூலஸ்தான மூர்த்தமாக காயத்ரீதேவி, முன்னிருக்கும் விக்னேஸ்வரர், இடதுபுறம் சரவணபவன், முன்னே பாசுபதேஸ்வரலிங்கம், தொடர்ந்து வாயு புத்திரர் ஆஞ்சிநேயர், சீதாவல்லபம் ஶ்ரீ இராமச்சந்திரர், முனிசிரேஸ்டர், அகத்தியமாமகரிஷி, காயத்ரீமந்திரம் அருளிய விஸ்வாமித்திரமகரிஷி, கோகுலத்தில் தவழ்ந்த தேவகிநந்தன், கிருஷ்ணபகவான் மற்றும் அமிர்த்தக் கலசம், தன்வந்திரிமகரிஷி முதலான பல மூர்த்தங்கள் அமையப்பெற்றுள்ளன.