ஆளுமை: வேதநாயகி பேரின்பநாதன்
பெயர் | வேதநாயகி |
தந்தை | சிவசம்பு |
தாய் | பார்வதி |
பிறப்பு | 1956.10.26 |
இறப்பு | - |
ஊர் | சரவணை |
வகை | ஆசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வேதநாயகி பேரின்பநாதன் 1956.10.26 தீவகத்தைச் சேர்ந்த சரவணை என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை தப்பியாப்பா சிவசம்பு , தாயார் சிவசம்பு பார்வதி ஆவார். இவரது ஆரம்பக்கல்வியினை சரவணை ரோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலையில் கற்றார். இடைநிலை கல்வியினை வேலணை மத்திய மகாவித்தியாலத்திலும் கல்வியினை பயின்றார் அங்கு உயர்தர பரீட்சையில் சித்திஒயடைந்தார் பின் பல்கலைக்கழகம் சென்று விஞ்ஞானப் பட்டதாரி ஆனார் 1984 ஆம் ஆண்டு விஞ்ஞானப் பட்டாதாரி நியமனத்தில் வவுனியா பம்புக்குளம் மகளிர் கல்லூரியில் முதல் நியமனம் பெற்று ஆசிரியராக கடமையாற்றினார். பின்னர் 1989 ஆம் கல்வி டிப்ளோமா அனுமதி பரீட்சையில் சித்தியடைந்து டிப்ளோமா கல்வியை தொடருவதற்காக யாழ்ப்பாணம் இடமாற்றம் பெற்றார் 1989 ஆம் ஆண்டு மார்ச் மாதம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் ஆசிரியராக நியமனம் பெற்றார். இவர் பகுதி நேர டிப்ளோமா கல்வி நெறியினை முடிப்பதற்காக தனது வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் காரணத்திற்காக இந்தப் பாடசாலையினை தெரிவு செய்தார். அங்கு உயர்தர மாணவர்களுக்கு கற்பித்து கொண்டிருக்கும் அதே வேளை கீழ் வகுப்பு மாணவர்களுக்கும் கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பாடங்களையும் கல்வி கற்றார்.