ஆளுமை:அப்துல் றசூல், அப்துல் மனாப்

நூலகம் இல் இருந்து
Thanujah (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:32, 25 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அப்துல் மனா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அப்துல் மனாப் அப்துல் றசூல்
தந்தை அப்துல் மனாப்
தாய் சித்தி உம்மா
பிறப்பு 1965.04.01
ஊர் கிண்ணியா
வகை இலக்கிய ஆளுமை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


கிண்ணியா றஹ்மானியா நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட அப்துல் மனாப் அப்துல் றசூல் 01.04.1965 இல் அப்துல் மனாப் மற்றும் சித்தி உம்மா ஆகியோருக்கு மகனாக பிறந்தவர். கிண்ணியா அல் அக்ஸாக் கல்லூரி, கிண்ணியா மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார்.

தற்பொழுது ஆசிரியராகப் பணிபுரியும் இவர், கிண்ணியா ஆயிலியடி கிராமத்தில் வசித்து வருகின்றார். 1987 இல் தினகரனில் வெளியான "சின்னஞ் சிறுசுகள்" என்ற சிறுகதை மூலம் இலக்கிய உலகுக்கு அறிமுகமானார். சிறுகதை, கவிதை, சிறுவர் பாடல், குறுந் திரைப்படம் எனப் பல்துறைகளில் ஆர்வம் காட்டி வருகின்றார். வாவன்காடு வசந்தன், கட்டையாறு கவிராயர் என்பன இவரது புனைபெயர்.

1987 இல் வெளிவந்த குறுநகை இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர் இவர் ஆவார். இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். சிந்தாமணி, தினகரன், வீரகேசரி, சுடர்ஒளி, மித்திரன், நவமணி போன்ற பத்திரிகைளில் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. அதேபோல பல்வேறு சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.

"இருபயணங்கள்" என்னும் குறுந்திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வேடம் ஏற்றுள்ளார். உறவுகள் குதூகலிக்கட்டும் என்பது இவரது சிறுவர் பாடல் நூல். இது 2012 இல் வெளிவந்தது.

கிண்ணியா சமூகநல கலைக்கலா மன்றம் இவருக்கு "கலைத்தென்றல்" பட்டம் வழங்கிக் கௌரவித்தது. அதேபோல கிண்ணியா பிரதேச கலாசார அதிகாரசபை "பா வேந்தன் பட்டம்" வழங்கிக் கௌரவித்தது.

இன்றுவரை தொடர்ச்சியாக தன்னுடைய இலக்கிய பணிகளை தொடர்ந்து வருகின்றார்.