ஆளுமை: கௌரி ரமணா

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:58, 1 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்= கௌரி| தந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கௌரி
தந்தை முத்துக்குமாரசாமி
தாய் தெய்வநாயகி
பிறப்பு 1963.04.14
இறப்பு -
ஊர் இல 15 மாதங்கவத்த கொழும்பு .06
வகை -
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கௌரி முத்துக்குமாரசாமி 1963.04.16 யாழ்ப்பாண மாவட்டத்தில் பிறந்தார். இவரது தந்தை செல்லையா முத்துக்குமாரசாமி, தாய் தெய்வநாயகி முத்துக்குமாரசாமி இவருடைய தந்தை முத்துக்குமாரசாமி யாழ் இந்துக் கல்லூரியில் விஞ்ஞான இராசனவியல் ஆசிரியராக இருந்து பின் அப்பாடசாலையில் உப அதிபராக இருந்தார். இவரது தாயாரும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் விஞ்ஞான, இரசாயனவியல் ஆசிரியராக இருந்தார் 1990 இல் ஓய்வு பெற்றார். 1970 ஆம் ஆண்டில் மூன்றாம் வகுப்பில் யாழ் இந்து மகளிர் கல்லூரியில் கல்வி கற்றார். அதனைத் தொடர்ந்து 1981 ஆம் ஆண்டு வரை கல்வி கற்று உயர்தர வகுப்பில் கற்று பல்கலைக் கழகத்திற்கு அனுமதி பெற்றார். விஞ்ஞானப் பிரிவில் தகுதி பெற்றார் 1983-1984 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக் கழகத்தில் சிறப்புப் பட்டம் பெற்றார். 1988 ஆம் ஆண்டு வெளியேறினார் இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளரகா 1990 ஆம் ஆண்டு வரை பல்கலைக்கழகத்தில் கடமை புரிந்தார் 1990 ஆம் ஆண்டு கொழும்பில் உதவி அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளராக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து சிரேஷ்ட உதவி அரசாங்க பகுப்பாய்வாளராக , பிரதி அரசாங்க பகுப்பாய்வாளராக , மேலதிக அரசாங்க இரசாயண பகுப்பாய்வாளராக கடசியில் நிறுவனத்தின் தலைவியாக . இருந்தார். இவருடைய சகோதரர் பெயர் அனுஷியா முத்துக்குமாரசாமி ஆவார். மாணவ தலைவியாக யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் 1979 இல் 1981 வரைக்குமாக இருந்தார். இவருக்கு 1993 களில் திருமணம் நடைபெற்றது. மகன் பெயர் விஸ்ணுபிரியன் , மகள் அஸ்வினி ஆவர்கள், 1996 இல் நெதர்லாண்ட் சென்று முதுநிலைப்பட்டத்திற்காக சென்று படித்தார் . பின்னர் 1997 இல் திரும்ப வந்து சிரேஷ்ட உதவி அரசாங்க பகுப்பாய்வாளராக 2006 இல் இருந்து கடையாற்றினார் .

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:_கௌரி_ரமணா&oldid=623604" இருந்து மீள்விக்கப்பட்டது