நிறுவனம்:திரு/ விபுலானந்தா கல்லூரி

நூலகம் இல் இருந்து
Thanujah (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:26, 27 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=தி/ விபு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தி/ விபுலானந்தா கல்லூரி
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் திருகோணமலை
முகவரி கண்டி வீதி, திருகோணமலை
தொலைபேசி 0262222515
மின்னஞ்சல் tvipulananda@slt.lk
வலைத்தளம் -


விபுலானந்தா கல்லூரி திருகோணமலை நகரின் திறவுகோலாகவும் சமாதானத்திற்குப் பாலமாகவும் அமையும் ஓர் கல்லூரியாகும். இது 1500க்கு மேற்பட்ட மாணவர்களுடன் தரம் 1 முதல் தரம் 13 வரை உயர்தரத்தில் கலை, வர்த்தகம், கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப பிரிவுகளையும் உள்ளடக்கிய 1 AB பாடசாலையாகும். அதிபர், பிரதி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், சிரேஸ்ட ஆசிரியர்களை உள்ளடக்கிய முகாமைத்துவக்குழு அமைக்கப்பட்டு அதனூடான தீர்மானங்களின் அடிப்படையில் இரு பிரதி அதிபர்கள் (நிதி நிர்வாகம், கல்வி அபிவிருத்தி) இவர்களுடன் பகுதித் தலைவர்கள் அவ்வப் பகுதிகளின் முழுமையான செயற்பாடுகளிலும் பொறுப்பாயிருப்பதோடு தர இணைப்பாளர், பாட இணைப்பாளர், வகுப்பாசிரியர், பாட ஆசிரியர்களின் கடமைகள் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டும் சீராக பாடசாலை இயங்க வழி செய்யப்பட்டுள்ளது. பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் இவைகளின் செயலாளர்கள் உறுப்பினர்கள் மிகவும் சிறப்பாகவும் மிக பக்கபலமாகவும் செயற்படுகின்றனர்.

1947.05.07 அன்று 26 மாணவர்களுடன் கைவிடப்பட்ட பிரித்தானியரின் இராணுவ முகாமில் திரு. கதிரித்தம்பி அதிபர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. படிப்படியாக பாடசாலை தரவுயர்வுகளுக்கு ஏற்ப பெயர் மாற்றம் இடம்பெற்றிருக்கின்றது.

07.05.1947 - 30.06.1949 - திருகோணமலை அ.த.க வித்தியாலயம் 01.07.1949 - 30.04.1976 - தி/ கஞ்சி மடம் அ.த.க வித்தியாலயம் 01.05.1976 - 30.01.1993 - திருகோணமலை மேற்கு தமிழ் மகாவித்தியாலயம் 01.02.1993 - 31.12.1999 - திருகோணமலை விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயம் இறுதியாக இப்பாடசாலையானது 01.01.2000 இலிருந்து தி/ விபுலானந்தா கல்லூரி எனும் பெயரில் 1AB தரபாடசாலையாக வளர்ச்சியடைந்தது.

இந்த பாடசாலைச் சமூகம் பல்லின, மத, சூழலிலும் சந்திக்குடியிருப்பாகவும் அமைவதோடு சமூக, பொருளாதார, கல்வி நிலைமைகள் சிறந்த கற்றல் சூழ்நிலை உருவாக்கத்திற்கு சாதகமாக இல்லையாயினும் ஆசிரியர்களின் மேலான வினைத்திறனுடனான செயற்பாடுகள் நகர்ப்புற பாடசாலைகளின் வெற்றி நிலைகளுடன் போட்டியிடக் கூடியதாக உள்ளமை பெருமைக்குரியது.

சாரணர் இயக்கம், முதலுதவியும், சென் ஜோன் அம்புலன்ஸ், இன்ரக்ட் கழகம் (Intract Club) சிறப்பான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். மரநடுகை, விஷேட செயற்திட்டங்களை செயற்படுத்துதல் முதலானவற்றுடன் மாவட்ட தேசிய ரீதியான போட்டிகளிலும் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர் .