ஆளுமை: சிவகாமி அம்பலவாணர்
பெயர் | சிவகாமி |
தந்தை | வயித்திலிங்கம் |
தாய் | அன்னபூரணி |
பிறப்பு | 1944.09.20 |
இறப்பு | - |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | - |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிவகாமி அம்பலவாணர் 1944.09.20 யாழ்ப்பாண மாவட்டத்தில் பிறந்தார். இவரது தந்தை வயித்திலிங்கம், தாய் அன்னபூரணி இவருடைய தந்தை வயித்தியலிங்கம் உரும்பிராய் இந்துக் கல்லாரியின் அதிபராக இருந்து மாணவர்களை முன்னேற்ற அயராது பாடுபட்டவர்
யாழ் இந்து மகளிர் கல்லூரியில் நான்காம் வகுப்பில் இருந்து பல்கலைக்கழக புகுமுக வகுப்பு வரை (1953ஆம் ஆண்டு தொடக்கம் 1962ஆம் ஆண்டு வரை) முதல் மாணவியாக கல்விபயின்றார். கல்லூரியில் பயிலும் காலத்தில் தனக்குக் கல்வி கற்பித்த ஆசிரியைகளின் அபிமான மாணவியாகத் திகழ்ந்தார். அத்துடன் பாடசாலையில் நடைபெறும் சங்கங்களின் திறமைகளுக்கு சகமாணவிகளோடும் ஆசிரியைகளோடும் சேர்ந்து மெருகூட்டினார்.
யாழ் இந்து மகளிர் கல்லூரியில் இருந்து பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட முதல் இரு மாணவிகளில் ஒருத்தியாக பல்கலைக்கழகம் புகுந்து 1966 இல் இளமானிப்பட்டம் பெற்றார்.
சிவகாமி ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளரும் பிரதமரின் ஆலோசகருமாகிய டாக்டர் அம்பலவாணரைக் கரம்பற்றி இல்லற பந்தத்தில் இணைந்து இருபிள்ளைகளைப் பெற்றெடுத்தார். மூத்தவர் குமரன் இங்கிலாந்து லைசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க ஆலோசகராக கடமையாற்றுகிறார். இளையமகள் அனுராதா நாட்டிய மற்றும் சங்கீத ஆசிரியராக இங்கு கடமையாற்றுகிறார். சிவகாமி மன்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் 4 வருடங்கள் தொழில்நுட்பவியலாளராக பணியாற்றினார். இவரின் விடாமுயற்சியும் அறிவாற்றலும் மருந்தகவியல் பேராசிரியர் H. Schnieden னை நன்றாகக் கவர்ந்துவிட்டன. இதனால் பேராசிரியர் Schnieden சிவகாமியின் பகுப்பாய்வுகளைத்தொகுத்து ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதும்படி பணித்தார். இக்கட்டுரை மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தால் தரமானதெனக் கணிக்கப்பட்டு சிவகாமிக்கு முதுமானிப்பட்டம் வழங்கப்பட்டது. பம்பர் அனட் புரூஸ் நிறுவனத்தில் (Bamber & Bruce Ltd.) பிரதம பகுப்பாய்வாளராக 34 வருடங்கள் கடமையாற்றினார். இவரது அயராத முயற்சியினாலும் கடின உழைப்பாலும் அவரது ஆய்வுகூடத்திற்கு அரசாங்க அங்கீகாரம் கிடைத்தது. அகில இலங்கையிலுமே அரசாங்க அங்கீகாரம் பெற்ற முதலாவது ஆய்வுகூடம் பம்பர் அன்ட் புரூஸ் நிறுவனமாகும்.