நிறுவனம்ːஅம்/ சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல்

நூலகம் இல் இருந்து
Thanujah (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:52, 16 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்= சாய்ந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல்
வகை முஸ்லிம் ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் அம்பாறை
ஊர் சாய்ந்தமருது
முகவரி சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாயல், சாய்ந்தமருது
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாயல் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் பிரதான வீதியில் அமைந்துள்ளது. சாய்ந்தமருதில் முஸ்லிம்கள் வாழத் தொடங்கிய காலத்தில் ஊரின் தென்பகுதி காடாக இருந்துள்ளது. அக்காட்டுப்பகுதியில் மரங்களை வெட்டியெடுத்து இப்பொழுது பெரிய பள்ளிவாசல் அமைந்திருக்கும் இடத்தில் மரங்களையும் இலுக்குகளையும் கிடுகுகளையும் கொண்டு சிறிய பள்ளிவாசலொன்றை தற்காலிகமாக அமைத்துக்கொண்டார்கள். இது முன்னர் முகைதீன் பள்ளிவாசல் என அழைக்கப்பட்டது.

12ஆம் நூற்றாண்டில் தஃவாப் பணிக்காக பக்தாத் நகரில் இருந்து முகைதீன் அப்துல் காதர் ஜெய்லானி அவர்களின் சிஷ்யர் இலங்கை வந்ததாகவும் அவர் அக்கால சிங்கள அரசனின் (கஜபாகு) புதல்வனது தீராத நோயைக் குணப்படுத்தியதனால் அவருக்கு அந்த அரசன் கரைவாகு பூமியை பரிசாகக் கொடுத்து அங்கு காணப்பட்ட பள்ளிவாசல்களை முகைதீன் பள்ளிவாசல் என அழைக்கப்பட வேண்டும் என கட்டளையிட்டதாகவும் முன்னோர்கள் கூறுகின்றனர்.

1870 ஆம் ஆண்டில் பிரதம மரைக்காயர் மீராலெவ்வைப் போடி வன்னியனார் காலத்தில் சுமார் 1000 பேர் தொழக்கூடிய இடவசதியுள்ள பள்ளிவாசலாக மாற்றம் பெற்றது. 1961 ஆம் ஆண்டில் பிரதம மரைக்காயர் மு.அ. அப்துல் கபூர் காலத்தில் முன்பக்கமாக மண்டபமொன்று அமைத்து முகப்பு வேலைகளும் செய்யப்பட்டு இப்பள்ளிவாசல் புதுப்பொழிவுடன் விளங்கியது. தற்போது சுமார் 5000 பேர் தொழக்கூடிய இடவசதி கொண்ட இருமாடிக் கட்டடமாக கட்டுவதற்கு 1985ம் ஆண்டு பிரதம மரைக்காயர் எம். ஐ. எம். மீராலெவ்வை காலத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டு 2003ம் ஆண்டு பிரதம மரைக்காயர் ஐ. எம். முஹைதீன் காலத்தில் பூர்த்தி செய்யப்பட்டது.

3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வக்பு சபை சட்டத்தின் கீழ் இவர்கள் நம்பிக்கையாளர்களை தெரிவு செய்வார்கள். மரைக்காயர் மற்றும் நம்பிக்கையாளர் தெரிவின் போது குடி ரீதியாகவும், மஹல்லா ரீதியாகவும் பிரதிநிதித்துவம் வழங்கப்படுகின்றது. முன்னர் துறை சார்ந்தோர் மற்றும் பிரமுகர்களையும் விசேட மரைக்காயர்களாக நியமிக்கும் வழக்கம் இருந்துள்ளது.

புதிய யாப்பின் படி மரைக்காயர் சபை "சாய்ந்தமருது மாளிகைக்காடு இஸ்லாமிய சமய, சமூக, கலாசார பரிகாலன சபை" என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இச் சபை சாய்ந்தமருது மாளிகைக்காடு பிரதேசங்களில் உள்ள ஜும்மாப் பள்ளிவாசல்களையும் ஏனைய பள்ளிவாசல்கள், குர்ஆன் மத்ரசாக்கள், ஸியாரம்கள், மையவாடிகள், வக்பு செய்யப்பட்ட சொத்துக்கள், நிறுவனங்கள் ஆகியவற்றையும் நிர்வகித்து வருகின்றது.

மேலும் மரைக்காயர் சபை தேவைக்கு ஏற்ப திருமணப் பிணக்குகளையும் வேறு பிணக்குகளையும் விசாரணை செய்து வருகின்றது. சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கு மரைக்காயர்மார்கள், தனவந்தர்கள், போடிமார்கள் காலாகாலமாக நெற்காணிகளை அன்பளிப்புச் செய்துள்ளனர். இது வரை (2009) 36 பேர் 70 ஏக்கர் காணியை அன்பளிப்புச் செய்துள்ளனர்.

சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலுக்கு சொந்தமான 01 றூட் 1.5 பேர்ச் காணியில் அமைந்தள்ள பொதுச் சந்தை 1940 களில் பிரதம மரைக்காயராக இருந்த மு. கா. முகம்மது முகைதீன் காரியப்பர் அவர்களினதும் எம்.எம். காசிம் அவர்களினதும் முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்டது. 1992.09.01 இல் இடம்பெற்ற குண்டு வெடிப்பின்போது இச் சந்தைக் கட்டடம் சேதமடைந்தது.

இக் குண்டு வெடிப்பில் 21 பேர் மரணமானார்கள். பின்னர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான எம். எச். எம். அஷ்ரப் அவர்களின் முயற்சியினால் நவீன சந்தைக் கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் 1998.11.13 ஆம் திகதி அவர்களினாலேயே நடப்பட்டு, 1999.12.19 ஆம் திகதி அவர்களினாலேயே திறந்து வைக்கப்பட்டது.