ஆளுமை:அலாவுதீன், ஆதம்லெவ்வை

நூலகம் இல் இருந்து
Thanujah (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:38, 25 சூன் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அலாவுதீன்
தந்தை ஆதம்லெவ்வை
தாய் மீராவும்மா
பிறப்பு 1956.02.27
ஊர் பொத்துவில், அம்பாறை
வகை எழுத்தாளர்
புனை பெயர் ஒலுவில் அமுதன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அலாவுதீன், ஆதம்லெவ்வை (1956.02.27 - ) அம்பாறை, பொத்துவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஆதம்லெவ்வை. இவர் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை, கல்முனை சாஹிராக் கல்லூரி, ஒலுவில் அல்ஹம்றா மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றார்.

இவர் ஒலுவில் அமுதன் என்னும் புனைபெயரில் கிட்டத்தட்ட 30 சிறுகதைகளையும், 120 கவிதைகளையும், 40 கட்டுரைகளையும், 4 நாவல்களையும், 6 மெல்லிசைப் பாடல்களையும், 4 வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார். இவரது முதலாவது கவிதை 1976 பெப்ரவரியில் நடிப்பு எனும் தலைப்பில் தினகரனில் பிரசுரமானது.

1986 காலப்பகுதியில் புதுக்குரல் என்ற மாத சஞ்சிகையின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். அத்துடன் தினகரனில் “நினைவுகள் நிஜங்களல்ல” என்ற தொடர்கதையினையும் எழுதியுள்ளார்.

அலாவுதீன் அவர்கள் இதுவரை ஒன்பது நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். மனக்கோலம் (1988), மரணம் வரும் வரைக்கும் (1999) கலையாத மேகங்கள் (1999) நாம் ஒன்று நினைக்க (2000) மனங்களிலே நிறங்கள் (2001) கரையைத் தொடாத அலைகள் (2002) கூடில்லாத குருவிகள் (2002), நூலறுந்த பட்டம் (2003), ஒலுவில் அமுதன் கவிதைகள் (2004) என்பனவாகும்.

தொழில் ரீதியாக இலங்கை வங்கியில் எழுதுவினைஞராகச் சேர்ந்த இவர் தற்போது நிறைவேற்று அதிகாரியாகக் கடமைபுரிந்து வருகின்றார். இலங்கை வங்கியில் 25 வருட காலம் அர்ப்பணிப்புடன் வேலை மேற்கொண்டுவரும் இவரின் சேவையைப் பாராட்டி இலங்கை வங்கியின் தலைவி திருமதி. முனசிங்க விருது வழங்கி கெளரவித்துள்ளார்.

அகில இலங்கை ரீதியாக 1983 இல் அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். அத்துடன் சமாதானம் சஞ்சிகை ஆசிரியர் கலாபூஷணம் மருதூர்வாணர் 'இலக்கியச் சுடர்மணி’ பட்டம் வழங்கி கெளரவித்துள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 91-93